புதிதாக ஆவின் பால் அட்டை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

1 minute read
புதிதாக ஆவின் மாதாந்திர பால் அட்டை பெற ஆன்லைனில் விண்ணப்பி க்கலாம் என்று தமிழக அரசு அறிவித் துள்ளது.
 இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாதாந்திர பால் அட்டை நுகர்வோருக்கு ஆவின் வட்டார அலுவலகம் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக தங்கு தடையின்றி பால் வழங்கப் படுகிறது.

மேலும், நுகர்வோர் தங்கள் வீட்டில் இருந்தபடியே ஆவின் புதிய மாதாந்திர பால் அட்டை வாங்குவதற்கும், புதுப்பித்துக் கொள்ளவும் .

இணையதளத்தில் www.aavinmilk.com வசதி செய்யப்பட்டுள்ளது. பால் அட்டைக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இருப்பிடச் சான்றிதழ் அல்லது அடையாள அட்டை நகலைச் சமர்ப்பித்து பால் அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், நுகர்வோர் தங்கள் வீட்டு திருமணம், வீட்டு நிகழ்ச்சிகளுக்கும், சமையல் கலைஞர்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் தங்கள் பால் மற்றும் பால் பொருட்கள் மொத்த தேவைக்கும் ஆவின்

அலுவலகத்தை நேரிலோ அல்லது இதற்கென அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்தை தொடர்பு கொண்டோ (94455-30503)முன்பதிவுசெய்து பெற்றுக் கொள்ளலாம்.

நுகர்வோர் தங்கள் கருத்துகளை நுகர்வோர் நலன் மற்றும் சேவைப் பிரிவை 1800-425-3300 (இலவச தொலைபேசி) என்ற தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.
Tags:
Today | 7, April 2025
Privacy and cookie settings