வலங்கைமானை அடுத்த நீடாமங்கலத்தில் ரெயில்வே கேட் மீது அரசு பஸ் மோதியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ரெயில்வே கேட் திருவாரூர்–தஞ்சாவூர் பயணிகள் ரெயிலுக்காக நேற்று மாலை 4.45 மணி அளவில் நீடாமங்கலம் ரெயில்வே கேட்டை மூடி கொண்டிருந்தனர்.
அப்போது கும்பகோணத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக ரெயில்வே கேட் மீது மோதியது. இதனால் ரெயில்வே கேட் சேதம் அடைந்தது.
இதையடுத்து நீடாமங்கலம் ரெயில் நிலைய கண்காணிப்பாளர் அன்பழகன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு நீடாமங்கலம் போலீசாருக்கும், தஞ்சாவூர் ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.
போக்குவரத்து பாதிப்பு ரெயில்வே கேட் மீது மோதியதால் அரசு பஸ் பயணத்தை தொடர அனுமதிக்கப்படவில்லை. அந்த பஸ்சில் வந்த பயணிகள் வேறு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
பின்னர் ரெயில்வே கேட்டை சரி செய்யும் பணி நடந்ததால் 2 மணிநேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.