ஆக்ரா அருகே சாலை நடுவில் இறங்கிய போர் விமானம்!

நொய்டாவை ஆக்ராவுடன் இணைக்கும் யமுனா எக்ஸ்பிரஸ்வே சாலையில் மிராஜ் 2000 போர் விமானத்தை இந்திய விமானப்படை வெற்றிகரமாக நேற்று காலை தரையிறக்கி யுள்ளது.
 ஆக்ரா அருகே சாலை நடுவில் இறங்கிய போர் விமானம்!
நொய்டாவை ஆக்ராவுடன் இணைக்கும் யமுனா எக்ஸ்பிரஸ்வே சாலையில் மிராஜ் 2000 போர் விமானத்தை இந்திய விமானப்படை வெற்றிகரமாக இன்று காலை தரையிறக்கியுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஓராண்டை நிறைவு செய்துள்ளதை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சி மதுராவில் வரும் 25ஆம் தேதி நடக்க உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகிறார். யமுனா எஸ்க்பிரஸ்வே சாலையில் போர் விமானம் ஒன்று திடீர் என தரையிறங்கி ஒரு நிமிடம் நின்றதால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அவசர நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் விமானத்தை தரையிறக்க முடியுமா என்பதை சோதனை செய்யவே போர் விமானத்தை தரையிறக்கியதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய விமானப்படை பிரான்சிடம் இருந்து 2 மேம்படுத்தப்பட்ட மிராஜ் 2000 போர் விமானங்களை வாங்கியது. இது தொடர்பாக இந்தியா-பிரான்ஸ் இடையே ரூ.10 ஆயிரம் கோடிக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

முன்னதாக 1980களில் இந்திய விமானப்படைக்கு 49 மிராஜ் 2000 போர் விமானங்கள் வாங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings