மாயமான காதல் ஜோடி பெற்றோரிடம் ஒப்படைப்பு !

வலங்கைமான் அருகே மாயமான காதல்ஜோடி நீதிமன்ற உத்தரவால் அவரவர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


புகார் 

திருவாரூர் மாவட்டம், வலங்கைமானை அடுத்த அரித்துவாரமங்கலம் காவல் சரகம் தேவமவலம்¢ காலனித்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் தனலட்சுமி (வயது 18). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார்¢ கல்லூரியில் முதலாமாண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

வீட்டிலிருந்து இவர் பஸ்சில் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர்.

பின்னர் வீடு திரும்பவில்லை. தனலட்சுமியின் தோழிகள் மற்றும் உறவினர்கள் அனைவரிடத்திலும் ராஜேந்திரன் தனது மகள் வீட்டிற்கு வராதது குறித்து விசாரித்துள்ளார்.

ஆனால் தனது மகள் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை என்பதால் ராஜேந்திரன், தனலட்சுமியை காணவில்லை எனவும், தனது மகளை கண்டுபிடித்து தருமாறும் அரித்துவாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாயமான தனலட்சுமியை தீவிரமாக தேடிவந்தனர்.

பெற்றோரிடம் ஒப்படைப்பு 

இந்தநிலையில் மாயமான தனலட்சுமியும், அதே தெருவை சேர்ந்த செல்வம் மகன் தினேசும்(20) காதலித்து வந்ததும், திருமணம் செய்து கொள்ளும் நோக்கில் திருப்பூர் சென்று ஒரு வாரம் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நண்பர்கள் மூலம் போலீசார் தேடிவருவதை அறிந்த தனலட்சுமி, தினேஷ் இருவரும் திருப்பூரிலிருந்து மனம்மாறி அரித்துவாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

இதனையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் இருவரையும் நீடாமங்கலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இதில் தினேஷ் திருமண வயதை நிறைவடையாதவர் என்பதால் இருவரையும் அவரவர் பெற்றோரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து இருவரும் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
Tags:
Privacy and cookie settings