பண்டமாற்று முறைக்குப் பின் மனிதர்கள் பணத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். ஒரு வியாபாரிக்கும், வாடிக்கை யாளருக்கும் கடன் என்பது தனிப்பட்ட முறையிலான பழக்கமாக இருந்தது.
1920-ல் முதன் முதலில் சில பெட்ரோல் நிலையங்களும், பல கிளைகளைக் கொண்ட ஓட்டல்களும் தங்கள் கிளைகளில் பயன்படுத்தத்தக்க வகையில் கடனுக்கான கார்டுகளை வெளியிட்டன.
1930-களின் இறுதியில் இவற்றில் சில, மற்றவர்களின் கார்டுகளையும் அங்கீகரிக்கத் தொடங்கின.
பிறகு 1950-ல் `டைனர்ஸ் கிளப், பணம் கொடுத்துப் பெறும் கார்டுகளை ஒன்றுக் கொன்று தொடர் பில்லாத பல நிறுவனங்களில் செல்லக் கூடியவை யாக அறிமுகப்படுத்தினர்.
விரைவிலேயே `அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்’ அதே போல செய்தது. `பாங்க் அமெரிகார்டு’ என்பதே பின்னர் `விசா’ கார்டு என்றானது.
1959-ல் அது முதல் பாங்க் கிரெடிட் கார்டாக வெளி வந்தது. அதைத் தொடர்ந்து 1966-ல் `மாஸ்டர் கார்டு’ வெளி வந்தது.