ஜூபா, ஜூன் 18: உள்நாட்டுப் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தெற்கு சூடானில், இரண்டரை லட்சம் குழந்தைகள்,
உண்ண உணவின்றி பசியால் வாடி வருவதாக அந்நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட ஐ.நா., உதவிக்குழு தலைவர் கூறியுள்ளார்.
தெற்கு சூடான் விடுதலையானது முதல் அதன் அதிபராக சல்வா கிர் பதவி வகித்து வருகிறார்.
கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம், தன்னை ஆட்சியிலிருந்து வெளியேற்ற, முன்னாள் துணை அதிபர் ரீக் மாகார் சதி செய்வதாக, அதிபர் சல்வா கிர் குற்றம் சாட்டினார்.
அதுமுதல், கடந்த 18 மாதங்களாக, தெற்கு சூடானில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது.
போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஐ.நா., உதவிக்குழு, தெற்கு சூடான் சென்றுள்ளது. கடந்த மாதம் இக்குழுவின் தலைவர் டோபி லான்ஸர், திடீரென நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் தெற்கு சூடான் நிலவரம் குறித்து டோபி லான்ஸர் அறிக்கை வெளியிட்டுள்ளார்...
அதில் கூறப்பட்டுள்ளதாவது:தெற்கு சூடானில் அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற நிலை நிலவுவதால், அமைதி ஏற்படுவதற்கான சூழ்நிலை தென்படவில்லை. அதன் பொருளாதாரம், முற்றிலும் முடங்கும் சூழ்நிலை ஏறபட்டுள்ளது.
தெற்கு சூடான் நாட்டின் பாதி பகுதிகளில், மூன்றில் ஒரு குழந்தை, ஊட்டச்சத்து உணவின்றி வாடி வருகிறது. சுமார் இரண்டரை லட்சம் குழந்தைகள், உண்ண உணவின்றி பசியால் வாடி வருகின்றன.
தெற்கு சூடானின் நிலைமையை சமாளிக்க உடனடியாக, 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி தேவைப்படுகிறது; இதற்கு சர்வதேச நாடுகளை சேர்ந்தோர் உதவ வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.