1700-களின் பிற்பகுதியில், கைப்பிடி இல்லாத ஹேப்பி ஹார்சஸ் என்ற வண்டியை வேடிக்கைக்காகப் பயன் படுத்தினார்கள். காலால் தரையை உந்தித் தள்ளி அதை நகர்த்த வேண்டும்.
வண்டி ஓட்டுபவருக்குக் கஷ்டமாகவும், பார்ப்பவருக்கு ஜாலியாகவும் இருக்கும். 1817-ல் டிரய்சினா என்ற கைப்பிடி இல்லாத `ஹேப்பி ஹார்சஸ்’ வண்டி உருவானது.
1839-ல், கிராங் மூலம் பின்சக்கரத்துடன் பெடல்கள் இணைக்கப் பட்ட சைக்கிளை கிர்க் பேட்ரிக் மெக்மில் லன் உருவாக்கினார். இவ்வாறு ஆரம்ப கட்ட சைக்கிள் பிறந்தது.
1861-ல் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எர்னெஸ்ட் மிக்காவ்ஸ், இன்னும் சுலப மாகப் பயன்படுத்தப் படுக்கூடிய சைக்கிளாக அதை மேம்படுத்தினார். அதன் பெடல்கள் முன் சக்கரத்தோடு இணைக்கப் பட்டிருந்தன.
காலப் போக்கில் முன்சக்கரம் பெரிதாக மாறி, `பென்னி பார்த்திங்’ என்று அழைக்கப் பட்டது. 1885-ம் ஆண்டில் தான் இன்றைய சைக்கிள் அறிமுகமானது. ஜான் ஸ்டேர்லி என்பவர் தயாரித்த `ரோவர் சேப்டி’ சைக்கிள் தான் அது.
1888-ம் ஆண்டில் பிரிட்டன் சாலைகளில் சைக்கிள்கள் அனுமதிக் கப்பட்டன. ஆனால் ஓட்டுபவர், தொடர்ந்து மணி அடித்துக் கொண்டே செல்ல வேண்டும்!