சுரப்பிகள் சரியாக செயல்பட ஏக பாத சிரசாசனம் !

மனித உடலின் அனைத்து செயல் பாடுகளையும் கட்டுப் படுத்துவது ஹார்மோன்கள். மூளைப் பகுதியில் ஹைப்போதலாமஸுக்கு அருகில், மிகச் சிறிய பட்டாணி அளவுக்கு, அரை கிராம் எடையில் பிட்யூட்டரி சுரப்பி இருக்கிறது.
சுரப்பிகள் சரியாக செயல்பட ஏக பாத சிரசாசனம் !
இதுதான்  தைராய்டு, அட்ரினல், டெஸ்டீஸ், சினைப்பை  சுரப்பிகளைக் கட்டுப் படுத்துகிறது. 

இந்த நான்கு சுரப்பிகளிலும் ஹார்மோன் சுரப்பதில் ஏதேனும் பிரச்னை எனில், பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து ஒரு சிக்னல் அந்த சுரப்பிகளுக்குச் சென்று, ஹார்மோன் உற்பத்தி தூண்டப்படும். 

இந்த சுரப்பிகள் சரியாக செயல்பட ஏக பாத சிரசாசனம் செய்வது அவசியம்.
செய்முறை :

1. காலை நீட்டி உட்காரவும்.

2. இடது காலைத் தூக்கி தலைக்குப் பின்னால் வைக்கவும்.

3. வலது காலை நேராக நீட்டி இருக்கவும்.
4. இரண்டு கைகளையும் மார்புக்கு நேராகக் கொண்டு வந்து ஒன்றாக சேர்த்து வணக்கம் செய்யவும்.

5. இந்நிலை யில் சிறிது நேரமிருந்து பின் ஆரம்ப நிலைக்கு வரவும்

குறிப்பு:

இதே போல் வலது காலைத் தூக்கி தலைக்கு பின்னே வைத்து செய்யவும்.
பலன்கள்:

1. கை, கால்கள் வலுவடைகின்றன.

2. இடுப்பு, தண்டு வடம் வளையும் தன்மை பெறுகிறது.

3. அனைத்து சுரப்பிகளும் சரியாக செயல்பட உதவுகிறது.
Tags:
Privacy and cookie settings