சாப்பிட்ட பிறகு உடற்பயிற்சி... இதயத்துக்கு நல்லது... ஆய்வில் தகவல் !

2 minute read
அதிக கொழுப்பு சத்துமிக்க உணவு வகைகளை சாப்பிடுவதன் மூலம் உடல் நலத்துக்கு கேடு ஏற்படும். இதயம் பாதிக்கப்படும் என்ற கருத்து நிலவுகிறது.
சாப்பிட்ட பிறகு உடற்பயிற்சி... இதயத்துக்கு நல்லது... ஆய்வில் தகவல் !
ஆனால் அவற்றை சீரமைக்க சாப்பிட்ட பிறகு உடற்பயிற்சி செய்வது அவசியம் என தெரிய வந்துள்ளது. இது குறித்து ஜப்பான் ஆராய்ச்சி யாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

கொழுப்பு சத்துமிக்க உணவு பொருட்களை சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் டிரைகிளை செரிட்ஸ் மற்றும் கொழுப்பு சத்துகள் அதிகரிக்கின்றன. அதுவே இதய நோய்கள் உள்ளிட்ட பல்வேறு உடல் நலக்கோளாறுகள் ஏற்பட வழி வகுக்கின்றன.

எனவே சாப்பிட்டவுடன் சுமார் ஒரு மணி நேரம் நடப்பது, போன்ற  உடற்பயிற்சி செய்வதன் மூலம் ரத்தத்தில் ஏற்படும் கொழுப்பு, டிரைகிளை செரிட்ஸ் அளவு குறைகிறது.

இதன் மூலம் இதயம் பாதிப்பில் இருந்து தடுக்கப் படுவது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
Tags:
Today | 4, April 2025
Privacy and cookie settings