பனிக்கட்டியில் ஆவி ஏன்?

இப்போது குளிர் காலம். அந்த குளிரில் சூடாக `ஆவி பறக்க’ ஒரு கப் காபியோ அல்லது டீயோ குடித்தால் உடலுக்கு இதமாக இருக்கும்.
 
பனிக்கட்டியில் ஆவி ஏன்?
காபி அல்லது டீயில் ஆவி பறக்க அதில் உள்ள வெப்பம் காரணம் என்றால், பனிக் கட்டியில் இருந்தும் ஒரு `ஆவி’ வருகிறதே…

அது என்ன ஆவி என்று எப்போதாவது நீங்கள் யோசித்தது உண்டா? அதற்கு காரணம் இதுதான். பனிக்கட்டிக்கு அருகில் இருக்கும் காற்றில் ஈரத்தின் அடர்த்தி அதிகமாக காணப்படும். 
 
பனிக் கட்டிக்கும், அதன் சுற்றுப் புறத்திற்கும் உள்ள உஷ்ண வித்தியாசம் காரணமாக நீர்த்துளிகள் வெளிப் படுகின்றன.
அந்த நீர்த்துளிகள் மிக நுட்பமான தூசுத் துகள்களில் ஒட்டிக் கொண்டு ஆவி வடிவில் வெளியே றுகின்றன.

அது, நம் பார்வைக்கு பனிக்கட்டி ஆவியாவது போல் தெரிகிறது. உண்மையில், அது நீராவிதான். நாம்தான் அதை `ஆவி’ ஆக்கி விட்டோம்.
Tags:
Privacy and cookie settings