மணம் வீசும் கன்னுஜ் நகரத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட எழுத்தாளர் ஒருவர் தனது அனுபவத்தை இப்படி கூறுகிறார்.
“என்னுடைய தோழி ஒருத்தியின் பாட்டி வீடு கன்னுஜ் நகரத்தில் இருந்தது. நான் அங்கே சென்றபோது அந்த பாட்டி என்னை வரவேற்று, ஒரு சென்ட் பாட்டிலை தந்தார்.

நான் அதை திறந்தவுடனேயே சந்தன மணம் என்னைத் தழுவிக் கொண்டது. நீண்ட நேரம், அந்த மென்மையான மணமும், அது தந்த புத்துணர்வும் என்னை பரவசத்தில் ஆழ்த்தின.
இத்தனை சிறப்பு மிகுந்த சென்ட்டை அங்கே எப்படி தயாரிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. உடனடியாக அதற்குரிய விடை காண முயற்சித்தேன்.
அந்த மணத்துக்கு அடிப்படை காரணம் கங்கை மற்றும் காளி நதி நீர் தான் என்று தெரிந்து கொண்டேன். கன்னுஜ் நகரத்தின் வரலாற்றுப் பின்னணியும் சிறந்த சென்ட் தயாரிப்பதற்கு ஒரு காரணம் என்பதை தெரிந்து கொண்டேன்.

அந்த பகுதியை அரசாண்ட சக்கரவர் த்தியான ஹர்ச வர்தன் கி.பி.600-ம் ஆண்டில் பெர்பியூம் உருவாவதற்கு அடித்தள மிட்டிருக்கிறார்.
ஹர்சருக்கு வாசனை திரவியங்கள் மற்றும் அழகு சாதனங்கள் மீது அதிக ஆர்வம் இருந் துள்ளது. அதனால் அவைகளை தயாரிக்க ஊக்கு வித்தார். நிறைய சலுகைகளும் வழங்கினார்.
மேலும் இதற்கான மூலப்பொருட்களை வெளி நாடுகளி லிருந்து வர வழைத்தார். தன்னை சந்திக்க வரும் விருந்தி னர்களுக்கு சிறந்த வாசனை திரவிய ங்களை பரிசளித் துள்ளார்.
இதனால் அங்கே வாசனை திரவியங்கள் தயாரிக்கும் தொழில் வளர்ந்தது. இதன் மூலம் சென்ட் மட்டுமின்றி வாசனை சோப் மற்றும் வாசனை பொருட்களும் உருவாக்கப் பட்டன.
இதன் மூலம் உலகம் முழுவதும் கன்னுஜ் நகரத்தின் புகழ் மணம் பரவியுள்ளது. கன்னுஜ் நகரத்தில் வாசனை திரவியங் களை தயாரிக்கும் 650 நிறுவனங்கள் உள்ளன.
அதில் ஒரு நிறுவனத்தைச் சேர்ந்த புஷ்ப்ராஜ் ஜெயின் என்பவரை சந்தித்தேன். அவர் வாசனை திரவியங்கள் தயாரிக்கும் தொழில் ரகசியங்களை என்னிடம் கூறினார்.
அவற்றை உருவாக்க கையாளும் சூட்சுமத்தையும் விவரித்தார். ரோஜா, மல்லிகை மற்றும் சந்தனம் ஆகியவற் றிலிருந்து சாறு எடுத்து, அதனை `சென்ட்’ ஆக மாற்றும் விதத்தையும் விளக்கினார்.
நவீன கால சென்ட்களை விட, பாரம்பரிய வாசனை திரவியங்கள் தான் சிறந்தவை என்றும் தெரிவித்தார்.
அடுத்து அருகில் இருந்த விஜய் மார்க்கெட் என்றழைக் கப்படும் பிரதான சந்தைக்கு சென்றேன். அங்கே ஒவ்வொரு கடையிலும் விதவிதமான மணங்க ளைக் கொண்ட சென்ட்கள் உள்ளன.

மேலும் அங்கே வித்தியா சமான உணவு வகைகள், லஸ்ஸி மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவை பிரபலமாக உள்ளன. அவை ஒவ்வொன் றையும் அவர்கள் மிகச் சிறந்த முறையில் தயாரிக் கிறார்கள்.
அங்குள்ள சித்தேஸ்வரர் கோவில் 500 ஆண்டுகளுக்கு பழமை யானது. இந்த சிவன் கோவிலின் தோற்றமும், கட்டமைப்பும் நகரத்தின் பழமை மற்றும் பாரம்ப ரியத்தை பறைசாற்று கின்றன.
கங்கை நதியின் அழகும், அதைச் சுற்றியுள்ள பகுதியின் பசுமையும் நமது மனதுக்கு இதமான அனுபவத்தை தருகிறது.
அத்தர், சந்தனம், மல்லிகை மற்றும் ரோஜா மணம் கலந்த காற்றும், அதன் வாசமும் ஆத்மாவுக்கு இதமாக இருக்கின்றன” என்று நெகிழ்கிறார் அவர்.

உலகப் புகழ் பெற்ற வாசனை திரவியங்களும், ஆன்மிக சிறப்புகளும், கங்கையின் அழகும் நிறைந்த இந்த மணக்கும் நகரத்தை, எல்லோரும் பார்த்து ரசிக்க வேண்டும் தான்!