ஜெயிஷ்டிகாசனம் பயிற்சி | Jeyistikasanam !

0 minute read


செய்முறை:

1. குப்புறப்படுத்து, நெற்றி தரையில் தொடும்படி வைத்து, கைகள் இரண்டையும் விரல்கள் கோர்த்த நிலையில் தலையில் வைத்துக் கைமுட்டிகளை தரையில் தொடும்படி வைக்கவும்.

2. கால்கள் நீட்டப்பட்டு, குதிகால் மேல்நோக்க நுனிக்கால்கள் தரையிலிருக்க வேண்டும்.

3. மூச்சு சாதாரண நிலையில் இருக்க ஒரு சில நிமிடங்கள் இந்நிலையிலிருந்து ஆரம்ப நிலைக்கு வரவும்.

பலன்கள்:

1. தொப்பையைக் குறைக்கிறது.

2. மன இறுக்கத்தை போக்குகிறது.

3. தண்டு வடங்களில் உள்ள கோளாறுகளை அகற்றுகிறது.

4. உடலுக்கு நல்ல ஓய்வைக் கொடுக்கிறது.
Tags:
Today | 1, April 2025
Privacy and cookie settings