கர்ப்யூ ( ஊரடங்கு ) எப்படி உருவானது?

கலவர வேளையில் வெளியே ஆட்கள் நடமாடக் கூடாது என்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் படுகிறது. அது ஆங்கிலத்தில் கர்ப்யூ (Curfew) எனப்படுகிறது.
கர்ப்யூ ( ஊரடங்கு ) எப்படி உருவானது?
பிரெஞ்சுச் சொல்லான கவுரே பியூ என்பதில் இருந்து தான் `கர்ப்யூ’ வந்தது. அதன் பொருள், நெருப்பை மூடுவது. வெற்றி வீரர் வில்லியம், இந்தச் சொல்லை இங்கிலாந்து க்குக் கொண்டு வந்தார்.

ஒவ்வொரு தினத்திலும் இரவு எட்டு மணிக்கு அவரவர் வீட்டு நெருப்பை அணைக்க வேண்டும் அல்லது மூடி வைக்க வேண்டும் என்று `சிக்னல்’ அளிக்கப்படும்.

நெருப்பால் ஏற்படக்கூடிய ஆபத்தைத் தடுப்பதற்காக இந்த கர்ப்யூ சட்டம் முதன் முதலில் கொண்டு வரப்பட்டது.
அரசியல் சார்ந்த கொந்தளிப்பு ஏற்படும் சமயத்திலும் அதே கர்ப்யூ மணி அடிக்கப் படும். அதன் மூலம், மக்கள் அவரவர் வீடுகளிலேயே இரவு தங்கியிருக்க வேண்டும் என்று அறிவிக்கப் பட்டது.
Tags:
Privacy and cookie settings