மும்பையில் கள்ளச் சாராய பலி 33 ஆக உயர்வு!

மும்பையில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்து ள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. 

இரண்டாம் இணைப்பு:

மும்பை அருகே மலாட் என்ற குடிசைப் பகுதியில் விஷச் சாராயம் அருந்தி உயரிழந்த வர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 9 பேர் கவலைக் கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முதலாம் இணைப்பு:

மும்பை அருகே, மால்வானி பகுதியில் உள்ள ரத்தோடி கிராமத்தில் நேற்று முன்தினம் மது அருந்தி யவர்களில் பலருக்கு நேற்று காலை முதல் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

மலாட் மற்றும் கண்டிவாலியில் உள்ள மருத்துவ மனைகளில் சேர்க்கப்பட்ட அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நேற்று ஒரே நாளில் மட்டும் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இன்று மேலும் 12 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் பலியான தாகவும், இன்னும் 10 பேரது நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த மும்பை காவல் ஆணையர் ராகேஷ் மரியா, மாநில குற்றப்பிரிவு பொலிசாருக்கு இவ்வழக்கு மாற்றப் பட்டுள்ளதாக தெரிவித் தார்.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து 2 நாட்களு க்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் உத்தர ட்டுள்ளார்.

கள்ளச் சாராயம் விற்றது தொடர்பாக இதுவரை ராஜூ ஹன்மந்த பஸ்கார் (50), டொனால்ட் ராபர்ட் படேல் (47) மற்றும் கவுதம் ஹரே (30) ஆகிய 3 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

அவர்கள் மீது கிரிமினல் தண்டனைச் சட்டப் பிரிவுகள் 304, 328, 34 ஆகியன ற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

மேலும், கள்ளச் சாராயம் எங்கு காய்ச்சப்பட்டது? அதை எத்தனை பேர் குடித்தனர்? என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்று காவல் துறையினர் தெரிவித் துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings