வாரம் முழுவதும் 24 மணி நேரமும் வேலை வேலை என்று இருக்கும் இன்றைய காலகட்டத்தில் தூக்கம் என்பது மிகவும் தேவையானது என்பதே மறந்து விட்டது. தூங்கமுடிவது அதிருஷ்டம் என்றாகி விட்டது.
30% முதல் 40% மக்கள் வேலை பளுவின் காரணமாக தூக்கம் வருவதில்லை என்றும் 10%முதல் 15% மக்கள் தூக்கமே வருவ தில்லை என்றும் கூறுவதாக தேசிய அளவில் தூக்கத்தை ஆராயும் நிறுவனம் கூறுகிறது.
இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இருப்பினும் மனதின் குழப்பமான நிலையே முக்கிய காரணம்.
உடல் உபாதை, சீதோஷ்ண நிலையின் கடுமையான தாக்குதல், சூழ்நிலை அல்லது கடுமையான, தீராத உடல் நலக்கேடு ஆகியவற்றால் தூக்கமின்மை உண்டாகலாம். எனவே தூக்கமின்மையை போக்க மகராசனம் அவசியம் செய்யவும்.
செய்முறை:
1. குப்புறப் படுத்து முகவாய் தரையைத் தொட உள்ளங்கால்கள் மேல் நோக்கி இருக்கட்டும். கைகள் முன்னோக்கி நீட்டியிருக்கவும்.
2. கால் விரல்கள் வெளிப்புறம் நோக்க, குதிக்கால்கள் இரண்டும் ஒன்றை ஒன்று பார்க்க கால்களைச் சிறிது அகட்டி வைக்கவும்.
3. வலது பக்க உள்ளங்கையால் இடது தோளையும் இடது பக்க உள்ளங்கையால் வலது தோளையும் பற்றவும். முன்கைகள் சேருமிடத்தில் முகவாயை வைக்கவும்.
4. சாதாரணமாக மூச்சுவிட்டு இந்நிலையில் சுமார் ஒரு நிமிடமிருக்கவும், பின் ஆரம்ப நிலைக்கு திரும்பவும்.
பலன்கள்:
1. தூக்கமின்மையைப் போக்குகிறது.
2. உடல்முழுவதும் நல்ல ஓய்வினைக் கொடுக்கிறது.
3. முதுகு தண்டுவடத்தில் கோளாறு நீங்குகிறது.
4. மன இறுக்கத்தை போக்கி புத்துணர்ச்சி அளிக்கிறது.