1950-ம் ஆண்டுகளில் வணிக வளாகங்கள் அதிக அளவில் தோன்றின. ஆனால் 1967 வரை அவற்றுக்கு `மால்கள்’ (Malls) என்ற பெயர் கொடுக்கப்பட வில்லை.
பதினாறாம் நூற்றாண்டில் இத்தாலிய விளை யாட்டான பாலமாக்லியோ இங்கிலாந்தில் பால்-மால் என்ற பெயரில் அறிமுகமாயிற்று. 18-ம் நூற்றாண்டில் இந்த விளையாட்டு மறைந்து போனது.
அது விளையாடப் பட்ட லண்டன் தெரு ஒன்றுக்கு அந்தப் பெயர் வந்தது. பணக்காரர்கள் இந்தத் தெருவில் உள்ள கடைகளுக்குள் அலைந்து திரிவது,
பொருட்களை வாங்குவது ஒரு நாகரீகமான செயலாக ஆக, அந்த மாதிரியான பொருட்கள் விற்கும் வணிக வளாகங்கள் `மால்கள்’ என்று அழைக்கப் பட்டன.