இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) இதுவரை செலுத்திய திலேயே மிக அதிக எடை கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் வியாழக் கிழமை வெற்றிகரமாக பரிசோதிக்கப் பட்டது.
இந்த வெற்றியின் மூலம் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் இந்தியாவின் திட்டத்தில் முதல் வெற்றி கிடைத்துள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது.
மொத்தம் 630 டன் எடையும், 43.4 மீட்டர் உயரமும் கொண்ட இந்த ராக்கெட்டின் பக்கவாட்டில் இரண்டு எஸ்-200 மோட்டார்கள் இருந்தன.
இந்த இரண்டு மோட்டார்களிலும் தலா 207 டன் திட எரிபொருள் நிரப்பப்பட்டிருந்ததால் மிகப்பெரிய சப்தத்துடன் தரையில் அதிர்வு ஏற்பட, ராக்கெட் மேலெழும்பிச் சென்றது.
தரையிலிருந்து கிளம்பிய 5 நிமிஷங்கள் 30 விநாடிகளில் ஆளில்லா விண்கலத்தை 126 கிலோ மீட்டர் உயரத்துக்கு ராக்கெட் கொண்டு சென்றது. அங்கிருந்து, 80 கிலோ மீட்டர் உயரத்தில் பூமியின் வளிமண்டலத்துக்குள் விண்கலம் மீண்டும் நுழைந்தது.
அதன்பிறகு, அதிலுள்ள பாராசூட்டுகள் இயக்கப்பட்டு, அந்தமான், நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் வங்கக் கடலில் இந்த விண்கலம் மெதுவாக விழுமாறு செய்யப்பட்டது.
இவை அனைத்தும் திட்டமிட்டபடி 20 நிமிஷங்கள் 43 விநாடிகளில் துல்லியமாக நடைபெற்றதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்த வெற்றியை அடுத்து, மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் திட்டத்துக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது.
ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் ரூ.140 கோடியிலும், ஆளில்லா விண்கலம் ரூ.15 கோடியிலும் உருவாக்கப்பட்டது.
இந்தச் சோதனை, வெற்றி பெற்ற பிறகு விஞ்ஞானிகள் மத்தியில் இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் பேசியது:
அதிக சக்திவாய்ந்த ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இது 4 டன் வரை எடை கொண்ட தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்களை விண்ணுக்கு எடுத்துச் செல்லும் திறன் கொண்டது. இந்த நாள் இந்திய விண்வெளித் திட்டத்தில் மிக முக்கியமான நாளாகும்.
இந்த வகை ராக்கெட்டுகளை உருவாக்கும் திட்டம் 10 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இப்போது சோதனை ராக்கெட் வெற்றியடைந்துள்ளது.
பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும்போது உள்ள சவால்களை அறிவதற்காக 3.7 டன் எடையுள்ள ஆளில்லா விண்கலம் இந்த ராக்கெட்டுடன் அனுப்பப்பட்டது. அந்தச் சோதனையும் வெற்றியடைந்துள்ளது.
இந்த வகை ராக்கெட்டுக்கான அதிக சக்திவாய்ந்த கிரையோஜெனிக் என்ஜின் வடிவமைக்கும் திட்டத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அடுத்த 2 ஆண்டுகளுக்குள் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் அனுப்பப்படும், என்றார். ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் திட்ட இயக்குநர் சோம்நாத்: இந்தியாவுக்கு சக்திவாய்ந்த புதிய ராக்கெட் கிடைத்துள்ளது.
தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதில் நமது திறனை இந்த ராக்கெட் முழுமையாக மாற்றியமைக்கும்.
இந்த ராக்கெட்டுக்கான கிரையோஜெனிக் நிலை விரைவில் முழுமை பெறும் என்றார் அவர். ஆளில்லா விண்கல திட்ட இயக்குநர் உண்ணிகிருஷ்ணன் நாயர் பேசும்போது, ஆளில்லா விண்கலம் வெற்றிகரமாக திரும்பி உள்ளது.
ஒரு விநாடிக்கு 5.3 கிலோ மீட்டர் என்ற விண்கலத்தின் வேகம் பாராசூட்டுகளின் மூலம் விநாடிக்கு 50 மீட்டராகக் குறைக்கப் பட்டது என்றார்.
எண்ணூர் துறைமுகம் வருகிறது:
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 1,600 கிலோ மீட்டர் தொலைவில் அந்தமான், நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் விழுந்த விண்கலத்தை இந்தியக் கடலோரக் காவல்படை கப்பல் மீட்டெடுத்து, சென்னை எண்ணூர் துறை முகத்துக்குக் கொண்டுவர உள்ளது.
அங்கிருந்து விண்கலம் ஆய்வுக்காக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
வளிமண்டலத்துக்குள் மீண்டும் நுழைந்தபோது ஏற்பட்ட வெப்பத்தை விண்கலம் எவ்வாறு தாங்கியது, அதனுடைய பாராசூட்டுகள் எவ்வாறு இயங்கின போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.
இதிலிருந்து பெறப்படும் தகவல்கள் மனிதர்களை அனுப்பும் விண் கலங்களைத் தயாரிக்கப் பயன்படும்.