நரம்புகள் ஒய்வு பெற மத்ஸ்ய கிரிடாசனம் | Matsya kridasana !

ஆரோக்கியம் என்பது மனம் உடல் இரண்டையும் சார்ந்தே அமைகிறது. இரண்டுமே ஆரோக்கியமாக இருக்கும் போது அன் றாடவாழ்க்கையும் சீராகவே செல்லும்.
நரம்புகள் ஒய்வு பெற மத்ஸ்ய கிரிடாசனம்
நமது உடல் மனம் இரண்டின் ஆரோக்கியத்தையும் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு உணவு பழக்கம் என்றும் சொல்லலாம். 
கர்ப்பம் தரிக்கும் காலம் எது?
உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துகள் உடல் ஆரோக்கியத்தையும் நம்மை புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க வேண்டும். 

எப்போதும் நம் உடலின் இயக்கத்தை சீராக்கும் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைச் சீராக செயல்பட வைக்க வேண்டும்.. அதற்கு மத்ஸ்ய கிரிடாசனம் அவசியம் செய்ய வேண்டும்.

செய்முறை
1. வயிற்றுப் பகுதியை கீழே வைத்து கோர்த்த விரல்களைத் தலைக்குக் கீழ்வைத்துப் படுக்கவும். இடது காலை பக்கமாக மடக்கி இடது முழங்கையைத் தொடுமாறு வைக்கவும்.
2. வலது கால் நேராக நீட்டியிருக்க வேண்டும். தலையை வலது பக்கம் சாய்த்து வலது கையின் மேல்பாகத்தில் வைக்கவும்.

3. இந்நிலையில் சில நிமிடங்கள் இருந்து பின்பு அடுத்த பக்கம் மாறிப் படுக்கவும், மூச்சு சாதாரண நிலையில் இருக்கவும்.

பலன்கள்:

1. ஜீரண சக்தி அதிகரிக்கும்.

2. நரம்புகள் ஒய்வு பெறுகின்றன.

3. இடுப்புத் தசைகளைக் குறைக்கிறது.

4. உடல் முழுவதும் நல்ல ஒய்வு பெறுகிறது.
Tags:
Privacy and cookie settings