கடலில் செல்லும் கப்பல்களில் மனித மாலுமியுடன் தானியங்கி மாலுமியும் உண்டு என்று உங்களுக்குத் தெரியுமா?
இந்தத் தானியங்கும் மாலுமி, கப்பலைத் துல்லியமாக சரியான பாதையில் செலுத்துகிறது. இது மனித மாலுமியை விட திறமையாக வேலை செய்கிறது.
இதை நவீன சுழல் காம்பசுடன் இணைக்க வேண்டும். நவீன சுழல் காம்பஸ் சிறு தட்டச்சு எந்திரம் அளவு தான் இருக்கும். கப்பலின் ஆட்டம் அதைப் பாதிக்காது.
கப்பலின் அளவு எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அந்தக் காம்பஸ் போதுமானது. தானியங்கி மாலுமியில் என்னென்ன செய்ய வேண்டும் என்ற விவரங்களை உத்தரவாகப் பதிந்து விட்டால்,
அதன்படி கப்பலைச் செலுத்தும். ராடார் மூலம் உத்தரவு கொடுப்பதற்கேற்ப கப்பலை ஓட்டும் தானியங்கி மாலுமியும் உண்டு. ராடாரின் உத்தரவுக் கேற்ப தானியங்கி மாலுமி கப்பலைச் செலுத்தும்.
அவ்வப்போது கடலின் நிலைமையை அனுசரித்து இந்தத் தானியங்கி மாலுமி மனித மாலுமியைப் போல் வேலை செய்யும் ஆற்றல் கொண்டது.
தானியங்கி மாலுமி பொருத்தப்பட்டு, முதன்முதலில் தானியங்குக் கப்பலாக பயணம் செய்தது `மோர்ம கார்கோ’ என்ற 12 ஆயிரம் டன் எடையுள்ள அமெரிக்கக் கப்பல்.
அது 1964-ல் அமெரிக்கா வில் இருந்து ஐரோப்பாவுக்குச் சென்றது. அதன் பின்னர் இரண்டாண்டுகள் கழித்து, 65 ஆயிரம் டன் எடை உள்ள பிரெஞ்சுக் கப்பல் எஸ்.எஸ். டோலபெல்லா,
அது 1964-ல் அமெரிக்கா வில் இருந்து ஐரோப்பாவுக்குச் சென்றது. அதன் பின்னர் இரண்டாண்டுகள் கழித்து, 65 ஆயிரம் டன் எடை உள்ள பிரெஞ்சுக் கப்பல் எஸ்.எஸ். டோலபெல்லா,
தானியங்கு வசதியால் செயின்ட் நசயேர் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது. அதில், கப்பலைச் செலுத்துவதற்கான சக்தி உற்பத்திச் சாதனமும் தானியங்கு முறையில் அமைக்கப் பட்டிருந்தது.