வேலைக்காக RESUME தயார் செய்வது எப்படி !

இவை நினைவி லிருக்கட்டும்! ஒருவர் வேலைக்கு விண்ணப்பிக்கும் போது தனது சுயவிவரக் குறிப்புடன் (சி.வி.) இணைத்து அனுப்பும் இணைப்புக் கடிதம் முக்கியமானது.

அது, வழக்கமான தபால் என்றாலும், மின்னஞ்சல் என்றாலும், 

விண்ணப்பதாரர் பற்றிய `முதல் மதிப்பை’ உருவாக்குபவை அவைதான்.

எனவே, இணைப்புக் கடிதம் தயாரிப்பதில், சுய விவரக் குறிப்பை 

உருவாக்குவதற்கு இணையான கவனத்தைச் செலுத்த வேண்டும்.
 
இணைப்புக் கடித விஷயத்தில், விண்ணப்பதாரர் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:


1. சரியான நபருக்கு…

இணைப்புக் கடிதம் அனுப்புவதில் அடிப்படை யான விஷயம், அதன் முகவரியில் குறிப்பிட் ருப்பவரும்,

உள்ளே குறிப்பிட்டு எழுதப்படுபவரும் ஒரே நபராக இருக்க வேண்டும் என்பது. “பலர், `ஏ’ என்ற நபரை முகவரியில் குறிப்பிட்டு விட்டு, `பி’ என்ற நபருக்கு உள்ளே குறிப்பிட்டு எழுதுவார்கள்.

அது அலட்சிய மனோபாவத்தையே காட்டும். விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் வாய்ப்பைக் குறைக்கும். 

குறிப்பிட்ட நிறுவனத்தி லிருந்து உங்களுக்கு வரும் மின்னஞ்சல்,

தொலைபேசி அழைப்பு உங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும் என்பதால், சரியான, சாத்தியமான தொடர்பு வழியையும் குறிப்பிட வேண்டும்.

2. தெளிவில்லாதது…

வேலைக்கு விண்ணப்பிக்கும் பலர் புரியும் பெரும் தவறு, குறிப்பாக எந்த வேலைக்கு விண்ணப்பிக் கிறோம் என்று தெளிவாகக் குறிப்பிடாதது. 

நீங்கள் விண்ணப்பிக்கும் வேலையைப் பற்றித் தெளிவாக அறிந்திருப்பதும், அதை ஆரம்பத்திலேயே தெளிவாகக் குறிப்பிடுவதும் முக்கியமானது.

3. அடிப்படை விஷயங்கள்

உங்களின் இணைப்புக் கடிதமானது அடிப்படை விஷயங்களில் சரியாக இருக்க வேண்டும். 

அதாவது, அக்கடிதம் சுருக்கமாக, ஈர்ப்பதாக, வேலை அளிப்பவரின் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்க வேண்டும்.

பள்ளிப் படிப்பு, பொழுது போக்குகள் போன்றவற்றைக் குறிப்பிடத் தேவையில்லை. 

அவை எந்த மதிப்பையும் சேர்க்காது. இணைப்புக் கடிதத்தில் மூன்று அல்லது நான்கு பத்திகளுக்கு மேல் இருக்கக் கூடாது.

முதல் பத்தி, ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். ஒரு நீளமான இணைப்புக் கடிதம், உங்களுக்கு எதிராகத்தான் அமையும்.


4. அளவுக்கு மீறினால்…

நங்கள் இதற்கு முன் பல நிறுவனங்களில், பல வேலைகளில் சிறப்பாகச் செயல்ப ட்டிருக்கலாம். 

அவற்றை யெல்லாம் நீட்டி முழக்கி விளக்கி எழுதுவது நல்லதல்ல. 

வேலை அளிப்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் விஷயங்கள் சுருக்கமாக இருந்தால் போதும்.

எதிர்மறை விஷயங்கள், ஒன்றையே திரும்பத் திரும்ப எழுதுவது போன்ற வற்றைத் தவிருங்கள். 

அதே போல அதீதமான ஆர்வத்தையும் வெளிக்காட்டாதீர்கள். `இது எனது கனவு வேலை’ என்று வழியாதீர்கள்.

5. `பொத்தாம் பொதுவாக’…

நீங்கள் குறிப்பிடும் உங்களது திறமைகளை நிரூபிக்கும் விஷயங்களை இணைத்து அனுப்புவது அவசியம். 

விஷயங்களை அலசி ஆராயும் திறமை எனக்கு உண்டு’ என்பது போல

பொத்தாம் பொதுவாகக் குறிப்பிட வேண்டாம். ஒழுங்கற்ற அமைப்பு, எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் போன்றவை ஆரம்பத் திலேயே முகச்சுளிப்பை ஏற்படுத்தி விடும்.

6. சம்பள விஷயம்…

இணைப்புக் கடிதத்தில், உங்களின் தற்போதைய சம்பளம், எதிர்பார்க்கும் சம்பளத்தைக் குறிப்பிட வேண்டாம். 


அப்படித் தெரிவித்தால், ஆரம்பகட்டத் தொடர்புகள் அல்லது

நேர்முகம் மேற்கொள்ளப் படாமலேயே, விண்ணப்பதாரர் சம்பள விஷயத்தில் கண்டிப்புக் காட்டுகிறார் என்ற எண்ணத்தை சம்பந்தப்பட்ட நிறுவனத் துக்கு ஏற்படுத்தக்கூடும்.
Tags:
Privacy and cookie settings