சல்மான் கான் நடித்த "வீர்" திரைப்படம் பெரும் நஷ்டத்தை சந்தித்த நிலையில், தனக்கு எதிராக அவதூறு பரப்புவதாக கூறி, 250 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என அத்திரைப்படத்தை தயாரித்த பட அதிபர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதையடுத்து சல்மான்கானுக்கும், விஜய் கலானிக்கும் இடையே மோதல் மூண்டுள்ளது. உறுதியளித்தபடி சம்பளம் தரவில்லை என்று சல்மான்கான் குற்றம் சாட்டியுள்ளார். நடிகர் சங்கத்திலும் அவர் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து சல்மான்கானிடம் 250 கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக விஜய் கலானி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதுகுறித்து விஜய் கலானி கூறியதாவது... வீர் படத்தை தயாரிக்குமாறு சல்மான்கான் என்னிடம் தெரிவித்தார்.
நானும் சம்மதித்தேன். அதற்கு சம்பளமாக அவருக்கு ரூ.10 கோடி கொடுக்கப்பட்டது. படம் நன்றாக ஓடினால் மேலும் ரூ.15 கோடி தருவதாக ஒப்பந்தம் போட்டேன்.
ஆனால் படம் சரியாக ஓடவில்லை. பெரும் நஷ்டமடைந்து விட்டது. ஆனாலும் என் மீது அவதூறாக கருத்துக்களை சல்மான்கான் வெளியிட்டுள்ளார். 15 கோடி ரூபாய் கேட்டு மிரட்டவும் செய்கிறார்.
இதனால் என் மனம் புண்பட்டு உள்ளது. எனவே எனது புகழைக் கெடுத்ததற்காக 200 கோடி ரூபாயும், நிதியிழப்பு ஏற்படுத்தியதற்காக 50 கோடி ரூபாயும் என 250 கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்கிறேன்.
இவ்வாறு பட அதிபர் விஜய் கலானி கூறினார். ஏற்கனவே மான் வேட்டை வழக்கு, போதையில் கார் ஏற்றி கொன்ற வழக்கு ஆகியவற்றில் சிக்கித் தவித்து வரும் சல்மான் கானுக்கு தற்போது பட அதிபர் மூலம் மற்றுமொரு சிக்கல் வந்துள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு நடிகர் சல்மான்கான் நடித்த வீர் என்ற படத்தை விஜய்கலானி தயாரித்தார். அண்மையில் இப்படம் ரிலீசானது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்கள் ஆதரவு இல்லாததால், வசூலில் படுத்துக்கொண்டது.