ஆரோக்கியமான தைராய்டு சுரப்பிக்கு சர்வங்காசனம் பயிற்சி !

2 minute read
சர்வம், அங்கம், ஆசனம் ஆகிய 3 வடமொழிச் சொற்களின் கூட்டுச் சொல் தான் சர்வாங்காசனம் எனப்படுகிறது. 
ஆரோக்கியமான தைராய்டு சுரப்பிக்கு சர்வங்காசனம் பயிற்சி !
சர்வம் என்றால் அனைத்து என்றும் அங்கம் என்றால் உறுப்பு என்றும் ஆசனம் என்றால் நிலை என்றும் பொருள் வழங்கப்படுவதால் உடல் முழுதும் பயிற்சியில் ஈடுபடும் முறை தான் சர்வாங்கசனம் ஆகும். 

சர்வாங்காசனத்திற்கு அனைத்து ஆசனங்களுக்கும் ராணி அல்லது தாய் என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதயம் பலவீனம் மற்றும் தைராய்டினால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 

மாத்திரைகளை தினமும் உட்கொள்வதன் மூலம் பக்க விளைவுகள் ஏற்படுமே தவிர நோயைத் தீர்க்காது. 

எனவே தினமும் காலை யோகாசனங்களை செய்து நோயை விரட்டுங்கள்.சர்வங்காசனம் தைராய்டு நோயை குணப்படுத்தும் தன்மைக் கொண்டது.

செய்முறை:

1. விரிப்பில் மல்லாந்து படுத்து தலைக்கு மேல் கைகளை நீட்டவும்.

2. கால்களைச் சேர்த்து, மெல்ல உயரத் தூக்கி, முழங்காலை வளைக்காமல் தரையிலிருந்து 45 பாகை சாய்வில் நிறுத்தவும்.

3. கால்களை மேலும் உயர்த்தி 90 பாகைக்கு கொண்டு வரவும்.

4. இடுப்புப் பகுதியை மேலே உயர்த்தவும், மேல் உடலை உயர்த்திக் கைகளால் முழங்கைகளைத் தரையில் ஊன்றித் தாங்கவும் தலையைத் தூக்கக் கூடாது.

5. முதுகை இரு உள்ளங்கைகளால் தாங்கிக் கொள்ளவும். இடுப்புப் பகுதியிலிருந்து உடற்பகுதியைச் செங்குத்தாக 

முகவாய்க் கட்டையை நெஞ்சுக் குழியில் அழுத்தவும். கால்களைத் தரைக்கு இணையாகக் கொண்டு வரவும்.

6. உடற்பகுதியை நேராக்கிச் செங்குத்தாகக் கொண்டு வரவும். உடலின் அனைத்து எடையும் தோளுக்குக் கொண்டு வரவும். அதே சமயத்தில் சுவாசம் சீராக இருக்க வேண்டும்.

தலை தரையைத் தொட்டுக் கொண்டிருக்க அதிர்ச்சிகளைத் தவிர்த்து இரண்டு நிமிடங்கள் வரை இறுதி நிலையில் இருக்க வேண்டும்..

பலன்கள்:

1. தைராய்டு சுரப்பி ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

2. இதயம் பலமடையும்.

3. கண், காது, மூக்கு, தொண்டை ஆகியவைகளின் இயக்கம் சீராகும்.

4. உடல் வளம் பெறும், மனம் விரியும்.

5. வாதக்கோளாறுகள், மூலநோய், ஆஸ்துமா, சர்க்கரைவியாதி, சித்த பிரமை போன்ற நோய்கள் கட்டுப்படுத்தப் படுகின்றன.

எச்சரிக்கைகள்

இவ்வாசனம் செய்யும் போது எக்காரணம் கொண்டும் சிரிக்கக் கூடாது

உயர் ரத்த அழுத்தம் உள்ள போது இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்

கழுத்து, தோள்பட்டை, கீழ் முதுகு, இடுப்பு ஆகிய பகுதிகளில் கோளாறுகள் இருக்கும் போதும் இந்த ஆசனத்தை செய்வது நல்லதல்ல.

மாதவிடாய் தருணத்தில் இந்த ஆசனம் செய்ய வேண்டாம். சர்வாங்காசனம் செய்யும் போது உமிழ் நீரை வீழுங்கக் கூடாது.
Tags:
Today | 10, April 2025
Privacy and cookie settings