அமெரிக்காவில் வசிக்கிறார் 30 வயது சோனியா பாம்ஸ்டெய்ன். நவீன படகில் தனியாக 6 ஆயிரம் மைல் களைக் கடலில் கடந்து சாதனை செய்வ தற்காகக் கிளம்பியி ருக்கிறார்.
தினமும் 14-16 மணி நேரம் துடுப்புப் போடுவார். பிறகு ஓய்வெ டுத்து விட்டு, மீண்டும் துடுப்புப் போட ஆரம்பித்து விடுவார். இதுவரை 16 பேர் இந்தச் சாதனை முயற்சியில் ஈடுபட்டிருக் கிறார்கள்.
இவர்களில் 2 ஆண்கள் மட்டுமே இது வரை பசிபிக் கடலைக் கடந்து சாதனை செய்திருக் கிறார்கள். கடந்த ஞாயிற்றுக் கிழமை தன் பயணத்தை ஆரம்பித்தி ருக்கிறார் சோனியா.
செப்டம்பர் மாதம் அட்லாண் டிக்கைக் கடந்து சாதிப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கல்லூரி யில் படித்துக் கொண்டிருந்த போது மோசமான கார் விபத்தால் பாதிக்கப் பட்டார் சோனியா.
உடல்நிலை தேறிய வுடன் 2012ம் ஆண்டு 3 ஆண்க ளுடன் சேர்ந்து கடல் பயணம் ஒன்றை மேற் கொண்டார். அந்தப் பயணத் தால் ஈர்க்கப் பட்டு, இன்று தனியாளாகச் சாதிக்கக் கிளம்பி யிருக்கிறார்.
வெற்றியுடன் திரும்பி வாருங்கள் சோனியா!
பிரிட்டனில் இயங்கி வருகின்றன 500 கிளைகள் கொண்ட அஸ்டா சூப்பர் மார்க் கெட்கள். காய் கறிகளை குழந்தை கள் விரும்பிச் சாப்பிட வைப்ப தற்காகக் கடந்த 7 ஆண்டு களாக ஆராய்ச்சி செய்து வந்தது அஸ்டா.
மஞ்சள், சிவப்பு குடை மிளகாய் களை இணைத்து ஸ்பெஷல் குடை மிளகாயை உருவாக்கி யிருக்கி ன்றனர். இந்தக் குடை மிளகாயில் மஞ்சளில் சிவப்புக் கோடுகள் கண்களைக் கவர்கின்றன.
இனிப்புச் சுவையுடன் ஆரஞ்சு பழத்தில் உள்ளதை விட அதிக அளவுக்கு வைட்டமின் சி யும் இவற்றில் அடங்கியி ருக்கின்றன.
குழந்தை களிடம் ஸ்பெஷல் குடை மிளகாயைச் சமைத்துக் கொடுத்து விட்டு, கணக் கெடுப்பு எடுத்ததில் முதல் இடத்தைப் பெற்று விட்டது! தக்காளி, கேரட், பட்டானி, ஆரஞ்சு அடுத்த டுத்த இடங்களைப் பெற்று ள்ளன.
பார்க்கவும் சுவைக் கவும் அட்ட காசமாக இருக்கும் இந்த ஸ்பெஷல் குடை மிளகாய் ஜூன் 8 முதல் சூப்பர் மார்க் கெட்களில் விற்பனை க்கு வருகின்றன. 2 ஸ்பெஷல் குடை மிளகாயின் விலை ரூ.195/-
இனிப்பு, புளிப்பு எல்லாம் இருந்தால் குடை மிளகாய் என்ற பெயரை மாற்ற வேண்டும்…
நியூயார்க்கில் உள்ள டைம் ஸ்கொய ருக்குத் தினமும் ஏராள மான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கி ன்றனர்.
அங்கே வித விதமான கார்ட்டூன் கேரக்டர்கள் வேடமிட்டு மனிதர்கள் உலாவிக் கொண்டிருக் கின்றார்கள்.
கார்ட்டூன் கேரக்டர்களிடம் கை குலுக்கு வதிலும் புகைப் படங்கள் எடுத்துக் கொள்வதிலும் ஆர்வம் காட்டு கிறார்கள் சுற்றுலாப் பயணிகள். அவர்களாக விரும்பி அன்பளிப்பைக் கொடுத்து விட்டுச் செல்வார்கள்.
ஹலோ கிட்டி, மின்னி மவுஸ் போன்று வேடமிட்டு வந்தார்கள் மெலெண் டஸும் மோச்சாவும்.
இருவரும் சுற்றுலாப் பயணி களிடம் மிரட்டி பணம் பெற்றுக் கொள்வதும், அதிகப் பணம் தராதவர் களிடம் வன்முறை களில் இறங்கு வதுமாக இருந்தது கண்டுபிடிக் கப்பட்டது. இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
அங்கீகாரம் பெறாத சிலர் இப்படிச் சுற்றுலாப் பயணி களிடம் மோசமாக நடந்து கொள் கிறார்கள். உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்கிறார்கள்.