மத்திய மாநில அரசுகளின் பொருட்கள் சேவைகள் வரிகள் பல இருக்க அவற்றை ஒன்றாக இணைத்து இந்த புதிய GST வரி ஏற்படுத் தப்பட உள்ளது. இதனால் ஏற்படும் மாற்ற ங்களை பார்ப்போம்.
GST சட்டம்
மத்திய அரசின் கலால் வரி, சேவை வரி, மத்திய விற்பனை வரி, மாநில அரசின் விற்பனை வரி, நுழைவு வரி, பொருள் வாங்கும் வரி (சில மாநில ங்களில்), எல்லாம் நீக்கப்பட்டு, அவற்றிற்கு பதில் GST என்ற ஒரே வரி இருக்கும்.
இதனால், மாநில ங்கள் மேற்கூறிய வரிகளை விதிக்கும் சட்ட ரீதியான அதிகார த்தை இழக்கும். மத்திய மாநில அரசுகள் இணைந்தே GST வரி அமைப்பில் மாற்றங் களை ஏற்படு த்தும்.
மாநிலங் களுக்கு இடையே நிலவும் வரி சீரின்மை வியாபார த்தை எப்படி பாதிக் கிறது என்பதை முந்தைய வாரங் களில் பார்த்தோம். அதனை நீக்கும் பொருட்டு மாநில ங்கள் இந்த ஏற்பாட் டிற்கு ஒப்புக் கொண் டுள்ளன.
அதே நேரத்தில் மத்திய அரசு தன்னிச்சை யான GST மாற்றங் களை செய்யக் கூடாது என்பதால், இச்சட்டம் GST கவுன்சில் என்ற அமைப்பு உருவாக்க வழி செய்கிறது.
இதில் மத்திய, மாநில நிதி/ வருவாய் அமைச் சர்கள் உறுப்பினர் களாக இருப்பார். இதில் நான்கில் மூன்று பங்கு வாக்கு களுடன் பெறப் பட்ட தீர்மான ங்களே சட்ட மாற்றத் திற்கு ஏற்றுக் கொள்ளப் படும்.
GST வரி விகிதத் தில் ஏற்படுத் தப்படும் மாற்றங் களுக்கும் இந்த GST கவுன்சி லின் ஒப்புதல் பெறவேண்டும். GST சட்டத்தை ஓர் அரசியல் சட்ட மாற்றத் தின் மூலம் தான் ஏற்படுத்த முடியும்.
எனவே பாராளு மன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும் பான்மை யுடன் நிறை வேற்றப் பட்டு, பிறகு குறைந்த பட்சம் 50% மாநில சட்ட பேரவையில் நிறை வேற்ற பட்டால் மட்டுமே இச்சட்ட த்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிப்பார்.
சிறு வியாபாரி கள் இந்த சிக்க லான GST வரிக்கு உட்படுத்தக் கூடாது என்பதால், ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை வியாபாரம் செய்யும் நிறுவன ங்கள் தங்கள் வருட வியாபார மதிப்பில் 0.5% மட்டுமே GST செலுத் தினால் போதும். ஆனால் இவர்களு க்கு உள்ளீட்டு பொருள் வரிக் கழிவு கிடையாது.
GST வரி விகிதம்
GST என்பது VAT வகை வரி. இதில் ஒரு வியாபாரி பொருள் வாங்கிய போது செலுத்திய வரியை, தான் பொருள் விற்று செலுத்தும் வரியிலி ருந்து கழித்துக் கொள்ள லாம் என்ற முறை உண்டு,
இதற்கு Input tax credit என்று பார்த்தோம். இதுவரை, மத்திய அரசுக்கு செலுத்திய கலால் வரிக்கு மாநில விற்பனை வரியில் கழிவு கொடுக்க முடியாது. இனி இந்த சிக்கல் இல்லை.
ஏனெனில் இந்த இரண்டு வரிகளும் இணைந் தது தான் GST என்று மாறுகிறது. இந்தியா கூட்டாட்சி முறை யில் இருப்பதால், மத்திய, மாநில அரசுகள் இரண்டும் இந்த GST வரியை வசூலிக்கும். எனவே இதற்கு இரட்டை VAT (Dual VAT) என்ற பெயரும் உண்டு.
GST வரியில் மத்திய மாநில பங்குகள் என்னவாக இருக்கும் என்பது இதனை செயல்படு த்துவதில் உள்ள முதல் சிக்கல். GST வரி விகிதத்தை நிர்ண யிக்க கீழே உள்ள வற்றை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மத்திய மாநில அரசுகளு க்கு குறைந்தபட்சம் இப்போது ள்ள வரி வருவாயில் எவ்வித சரிவும் இல்லாமல், வரும் ஆண்டுகளில் தொடர்ந்து வரி வருவாய் உயர்வதற்கும் ஏதுவாக வரி விகிதம் உயர்வாக இருக்க வேண்டும்.
இதற்கு Revenue Neutral Rate என்று பெயர். இந்த RNR ஒவ்வொரு மாநிலத் திற்கும் மாறுபடும் போது, எவ்வாறு எல்ேலா ருக்கும் ஏற்புடைய ஒரே ஒரு RNR கண்டு பிடிப்பது?
இப்போது சில முக்கிய பொருட் களின் மீதான மத்திய மாநில வரி விகிதங் களை கூட்டினால் 23% முதல் 30% இருக்கிறது. எனவே GST 27% வரை இருக்க லாம் என்று தெரிகிறது.
இது மிக அதிகம் என்றும் சிலர் கூறுகி ன்றனர். GST யை செயல்படு த்துவதில் உள்ள இப்போதைய பிரச்சி னைகள் தொழில் துறையில் முன்னேறிய மாநில ங்கள் இப்போது CST மூலமாக கணிசமான வரி வருவாயைப் பெறுகி ன்றன.
GST செயல் படுத்தும் போது CSTயை விலக்க வேண்டும், இதனால் இந்த மாநிலங் களுக்கு ஏற்படும் வரி வருவாய் நஷ்டத் தையும் கவனமாக ஆராய்ந்து, மத்திய அரசு அந்த நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டும்.
இப்போ துள்ள GST சட்ட வரைவில் இந்த மாநில ங்கள் முதல் இரண்டு ஆண்டு களுக்கு CST 1% விதிக்கலாம் என்றும், அதன் பிறகு அதனையும் விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட் டுள்ளது.
இதனால் வரி விழு தொடர் நிலை (cascading effect) உருவாகும் என்பதால் இதனை அனுமதிக்க க்கூடாது என்று சிலர் கூறுகின்றனர்.
அதே நேரத்தில் மாநிலங் களுக்கு கொடுக்க வேண்டிய நஷ்டஈடு குறையும், மாநிலங் களும் GSTயை ஏற்றுக்கொ ள்வதற்கு இது உதவும் என்று மத்திய அரசு நினை க்கிறது.
GST வரியிலி ருந்து விளக்கு அளிக்க வேண்டிய பொருட் களின் பட்டியல் சிறிதாக இருந்தால், பல பொருட்கள் இப்போது புதிதாக வரி விதிப்புக்கு உட்படும், அந்த பொருட் களின் விலை உடனடியாக உயரும்.
GST வரியிலி ருந்து விளக்கு அளிக்க வேண்டிய பொருட் களின் பட்டியல் சிறிதாக இருந்தால், பல பொருட்கள் இப்போது புதிதாக வரி விதிப்புக்கு உட்படும், அந்த பொருட் களின் விலை உடனடியாக உயரும்.
அதே போல் இதுவரை குறை வான வரி விகித த்திற்கு உள்ளான பொருட்கள் மீது GSTயின் அதிக வரி விகிதம் விதிக்கப் படும் போது, அவற்றின் விலை களை உயர்த்தும்.
இது வரை சேவைகள் வரி 14% உள்ளது, சேவை களும் GSTயின் 27% வரிக்கு உட்படும் போது, அவற்றின் விலை களும் வெகுவாக உயரும்.
GST என்பது கணினிம யமாக்கப் பட்ட வரி நிர்வாக த்தில் தான் சரியாக செயல் படும். எனவே வியாபாரி களும், வரி நிர்வா கமும் முழுவதும் கணினி மயமாக வேண்டும்.
மத்திய வரி நிர்வாகம் கணினி மயமாக்கப் பட்ட நிலையில், இன்னும் பல மாநிலங் களில் இந்த ஏற்பாடு முழுமை பெற வில்லை. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். வியாபாரி களும் கணினி மயமாக்கப் பட்ட பில் (bill) முறைக்கு மாற வேண்டும்.
மாநில ங்களுக் கிடையே உள்ள வியாபா ரத்தின் மீதான GST மத்திய அரசால் மட்டுமே வசூலிக்க ப்படும். இது மாநில வரி நிர்வா கத்தில் சிக்கலை ஏற்படுத் தலாம். மாநிலங் களுக்கு ஏற்படும் வரி வருவாய் நஷ்டத்தை ஈடு செய்வதில் சிக்கல்கள் உண்டு.
நஷ்ட த்தை எப்படி அளவி டுவது, எவ்வளவு காலம் வரை ஈடு செய்வது என்ற பல அம்சங் களில் ஒருமித்த கருத்து உருவாக வில்லை. ஆனால் 5 வருடங்கள் வரை வருவாய் நஷ்டத்தை மத்திய அரசு ஈடு செய்யும் என்று GST சட்ட வரைவு கூறுகிறது.
பெட்ரோலிய பொருட்கள் மீது GSTக்கு பதில் தற்போது உள்ள மாநில விற்பனை வரி தொடர வேண்டும் என்று மாநில ங்கள் கேட்கின்றன.
மாநில விற்பனை வரியில் மூன்றில் ஒரு பங்கு பெட்ரோலிய பொருட்கள் மூலம் பெறப் படுகிறது. எனவே இதனை விட்டுத்தர மாநில ங்கள் தயங்கு கின்றன.
ஆனால் பெட்ரோல் எல்லா பொருட் களின் சேவைகளின் உற்பத்தியில் இருப்பதால் VAT தொடர்பி லிருந்து இதனை பிரிக்கக் கூடாது என்பது பொருளி யல்/வரி சட்ட வல்லுன ர்கள் கூறுகி ன்றனர். இது தொடர்பான முடிவை GST கவுன்சில் எடுக்க வேண்டும்.
நுகர்வு க்காக பயன்படுத் தப்படும் மது வகைகள் மீது GST விதிக்கப் படமாட்டாது. இதனை மது உற்பத்தி யாளர்கள் எதிர்கின்றனர்.
நுகர்வு க்காக பயன்படுத் தப்படும் மது வகைகள் மீது GST விதிக்கப் படமாட்டாது. இதனை மது உற்பத்தி யாளர்கள் எதிர்கின்றனர்.
மதுவும் GSTக்கு உட்பட வேண்டும் என்பது அவர்கள் கோரிக்கை, ஆனால் அவ்வாறு செய்தால் பெரிய வருவாய் இழப்பு ஏற்படும் என்பது மாநில அரசுகளின் எண்ணம்.
பொருட்கள், பயணிகள் போக்கு வரத்தின் மீது GST விதிப்பதில் சிக்கல் உண்டு.
போக்கு வரத்து ஆரம்பம் ஆகும் இடத்தில் இந்த வரி பெறபட் டாலும், அதனை போக்கு வரத்து முடியும் இடத்திற்கு அனுப்ப வேண்டுமா என்ற சிக்கல் உண்டு. ஏனென் றால், போக்கு வரத்து முடியும் இடத்தில் தான் அந்த சேவையை பெற்றவர் இருக்கிறார்.
இந்த சிக்கல் களுக்கு தீர்வு கிடைக்கும் பட்சத்தில் தான் ஜிஎஸ்டி யை அமல்படுத்த முடியும். 2016 ஏப்ரல் வரை காத்திரு ப்போம்.