மும்பையில் பெண் வழக்கறிஞர் ஒருவர் 22வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை சிஞ்சோலி பந்தர் கிங்ஸ்டோன் பகுதியை சேர்ந்த சோனி பட்டேல் என்ற பெண், மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.
அவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 22வது மாடியில் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்த சோனி பட்டேல் குளியலறை குளியலறை ஜன்னலை திறந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடித்த போது அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து தகவலறிந்த மலாடு பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டுள்ள பொலிசார், அந்த பெண் அவருடைய தூரத்து உறவினர் ஒருவரின் பாலியல் துன்புறுத்தல்களாலேயே தற்கொலை செய்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.