சவாசனம் என்பது செத்த பிணத்தை போன்று படுத்திருக்கும் யோகா நிலை ஆகும். இந்த ஆசனம் உடல் களைப்பை போக்குவதற்காக செய்யப்படும் ஆசனம் ஆகும்.
நீங்கள் தினமும் சவாசனம் செய்வதால் உடல் களைப்பை போக்கி உற்சாகம் பெற முடியும். இந்த ஆசனத்தை செய்வது மிகவும் எளிதானது.
மற்ற ஆசனங்களைப் போல நீங்கள் கை மற்றும் கால்களை எல்லாம் தூக்கி வளைத்து என எதுவும் செய்ய வேண்டாம். தரையில் படுத்த படியே இந்த ஆசனத்தை செய்தால் போதும்.
இப்படி படுத்தே கிடப்பது உங்க உடலை ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது. இது இரத்த அழுத்தத்தை குறைத்து மனதை ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது. அதைப் பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.
செய்முறை:
1. மல்லாந்து படுக்கவும், கைகள் உடலை விட்டுச் சிறிது தள்ளியிருக்க, உள்ளங்கை மேலே பார்த்தவாறு இருக்க வேண்டும்.
பாதங்களை வேண்டு மளவு பிரித்து வைத்து தலை எந்தப் பக்கமும் சாயாமல் நேராக வைத்து சாதாரணமாக சுவாசத்தை கண்களை மூடிக்கொண்டு செய்ய வேண்டும்.
2. இந்த நிலையில் நேரத்திற்கு ஏற்றவாறு ஒருநிமிடம் அல்லது இரண்டு நிமிடமி ருக்கவும்.
1. மனதின் இறுக்கமும், அழுத்தமும் சமன் செய்யப் படுகின்றன.
2. எல்லாத் தசைகளும், மூட்டுகளும் தளர்த்தப் படுகின்றன.
தனிமைப்படுத்துதல் மன ஆரோக்கியத்தை பாதிக்காமல் இருக்க !3. அதிக இரத்த அழுத்தம், மனதாலேற்படும் மனநோய்ப் பிரச்சி னைகளை வெகுவாகக் குறை க்கிறது.
4. பொதுவாக உடல்நலனை அதிகரிக்கச் செய்கிறது.