சீனாவில் மிகவும் முக்கியத் துவம் வாய்ந்த தேசிய பல்கலைக் கழகத் தேர்வில் காப்பியடிக்கும் மாணவர்களை தடுக்க கண் காணிப்புக்கு ஆளில்லா குட்டி விமானங்களை பயன்படுத்தும் முறை அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.
சீனாவில் ஆண்டு தோறும் ஆயிரக்கண க்கான மாணவர் களுக்கு பல்கலைக் கழக நுழைவு தேர்வு நடத்தப் படுகிறது. 'ஹை டெஸ்ட்' என்று குறிப் பிடப்படும் இந்த தேர்வும் மிகவும் முக்கியத் துவம் வாய்ந்தது.
இதில் தேர்ச்சி பெறுவதன் மூலம் மாணவர்கள் உயர் பதவிகளை பெறும் வேலை களை அடைய முடியும்.
தேர்ச்சி அடையாத மாணவர்கள் ஊதியம் குறைவான வேலை களுக்கு மட்டுமே செல்ல முடியும் என்ற வழிமுறை இருந்து வருகிறது.
ஆனால், இத்தேர்வில் வெற்றி பெறும் நோக்கத் தோடு சீன மாணவர்கள், பல்வேறு அதிநவீன தொழில் நூட்பங்களை பயன்படுத்தி முறை கேடுகளில் ஈடுப்படு கின்றனர்.
ஒயர்லெஸ் கருவிகள், ப்ளூடூத் என பல விதி மீறல்களில் மாணவர்கள் ஈடுபடுவது கண்டு பிடிக்கப் படுகிறது.
எனவே, இதனை தடுக்கும் வகையில் உயர் தொழில் நுட்ப ரேடியோ கண் காணிப்பு கருவிகள்,
ஆளில்லா குட்டி விமானங் களை தேர்வு நடைபெறும் மையங்களில் பறக்க விடப்பட்டு அதன் மூலம் மின்னணு சாதனங் களின் சிக்னல்களை கண்டறிந்து தேர்வை கண் காணிக்கும் முறையை அந்நாட்டு அரசு அறிமுகப்படு த்தியுள்ளது.
Tags: