பழைய வீட்டை புதுப்பிப்பதற்காக தன்னிடம் கடனாக வாங்கிய பணத்தை திருப்பிச் செலுத்தாத தன் மகன் மீது வழக்கு தொடுத்துள்ளார் பிரிட்டனைச் சேர்ந்த ஒரு கோடீஸ்வரர்.
பிரிட்டனைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஜார்ஜ் ஸ்டவ்சி. இவரது மகன் ஆர்தர் தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனம் ஒன்றில் ஆலோசகராக பணியாற்றுகிறார்.
2013-ல் சுமார் ரூ.6 கோடி மதிப்புள்ள தனது வீட்டை சீரமைக்கவும் விரிவுபடுத்தவும் தனது தந்தையிடமிருந்து ரூ.2.75 கோடி கடன் வாங்கியுள்ளார் ஆர்தர்.
அப்போது இந்தக் கடனை திருப்பிச் செலுத்துவ தாக வாய்மொழியாக உறுதியளித் துள்ளார் ஆர்தர்.
ஆனால் வாக்குறுதிப்படி தனது தந்தையிடம் வாங்கிய கடனில் ஒரு பைசாவை கூட ஆர்தர் திருப்பிச் செலுத்தவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த ஸ்டவ்சி, ஆர்தர் மீது உயர் நீதிமன் றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் கடனை திருப்பித் தருமாறு கேட்டார்.
எனினும் இதுவரை பணம் வந்து சேரவில்லை. எனவே, வட்டியும் அசலுமாக சேர்த்து ரூ.3 கோடியை வழங்க ஆர்தருக்கு உத்தரவிட வேண்டும் என்று ஸ்டவ்சி தனது மனுவில் கூறி இருக்கிறார்.
கடனுக்கான வட்டித் தொகை மட்டும் சுமார் ரூ.25 லட்சம் ஆகிறது. தந்தை தொடுத்துள்ள இந்த வழக்குக்கு நீதிமன்றத்தில் மகன் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.