சூரியனில் மனை களை விற்றுத் தர மறுப்பு தெரிவித்த பிரபல "ஈ-பே' இணைய விற்பனை தளம் மீது ஸ்பெயின் நாட்டுப் பெண் ஒருவர் வழக்கு தொடுத் துள்ளார்.
சூரியனில் மனை களை விற்றுத் தர மறுப்பு தெரிவித்த பிரபல "ஈ-பே' இணைய விற்பனை தளம் மீது ஸ்பெயின் நாட்டுப் பெண் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார்.
இது குறித்து பிரிட்டனைச் சேர்ந்த "ஸ்கை நியூஸ்' ஊடகத்தில் வெளியான
தகவல்:
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மரியா துரான் (54) என்ற பெண், சூரியனின் ஒரு பகுதி தனக்குச் சொந்த மானது என கடந்த 2010-ஆம் ஆண்டி லிருந்து கூறி வருகிறார்.
தன்னிடம் அனுமதி பெறாமல் சூரியனி லிருந்து மின்சாரம் தயாரி க்கும் நிறுவன ங்கள் மீது வழக்கு தொடரப் போவதாக பல முறை மிரட்டல் விடுத்த அவர், தற்போது "ஈ-பே' இணைய விற்பனை தளம் மீது வழக்குத் தொடர்ந் துள்ளார்.
காரணம் இது தான்:
தங்களது வலை தளம் வாயிலாக மரியா துரான் சூரியனில் மனை களை விற்பனை செய்வதை "ஈ-பே' தடை செய்து விட்டது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் உலகின் முன்னணி இணைய விற்பனை தளமான "ஈ-பே' மீது மரியா துரான் வழக்கு தொடந் துள்ளார்.
"ஈ-பே' வலை தளத்தில் தனது "சூரிய' மனைகளை மரியா துரான் நீண்ட காலம் விற்பனை செய்து வந்து ள்ளார்.
அதற்கு முன்ன தாவே, சூரியனின் ஒரு பகுதியை ஸ்பெயின் நாட்டு ஆவணப் பதிவு அலுவலகம் ஒன்றில் அவர் தனது பெயரில் பதிவு செய்து கொண் டுள்ளார்.
அந்தப் பகுதியை மனை களாகப் பிரித்து, சதுர மீட்டர் ஒரு யூரோ (சுமார் ரூ.72) என்ற விலைக்கு அவர் விற்று வந்து ள்ளார்.
இந்த "சூடான' விற்பனை இரண்டு ஆண்டுகள் கழித்து தான் "ஈ-பே' நிறுவன த்தின் பார்வை யில் சிக்கி யுள்ளது.
உடனடியாக, தங்களது விற்பனை விதி முறைகளை மீறியதாகக் கூறி மரியா துரானை தங்களது வலை தளத்தில் தடை செய்தது "ஈ-பே' நிறுவனம்.
ஏற்கெனவே சூரிய மின் உற்பத்தி நிறுவ னங்கள் மீது வழக்குத் தொடரப் போவதாக மிரட்டி வந்த மரியா, தனக்குச் சொந்த மான "சூரிய மனை'களை விற்றுத் தர மறுத்ததற்காக "ஈ-பே' மீதும் வழக்குத் தொடரப்போவதாக கூறி வந்தார்.
இந்த நிலையில், அவரது மனுவை ஸ்பெயின் நீதிமன்றம் ஒன்று அண்மை யில் விசாரணை க்கு எடுத்துக் கொண்டது.
இணையம் மூலம் சூரியனில் தான் விற்பனை செய்த மனைகளு க்கான 7,500 பவுண்டு களை (சுமார் ரூ.7.3 லட்சம்) "ஈ-பே'- விடமிருந்து பெற்றுத் தர வேண்டும் என அந்த மனுவில் மரியா துரான் கேட்டுள்ளார்.
மனு மீதான விசாரணை அடுத்த மாதம் நடைபெறும் எனத் தெரிகிறது.
இந்த விவகார த்தை நீதிமன்ற த்துக்கு வெளியே தீர்த்துக் கொள்ளலாம் என "ஈ-பே' நிறுவனம் கேட்டுக் கொண்ட போதும், அதற்கு மரியா துரான் மறுத்து விட்டதாகக் கூறப் படுகிறது.
"பிற கிரகங் களையும், நட்சத்திரங் களையும் உரிமை கொண்டாடக் கூடாது' என்ற ஐ.நா. தீர்மான த்தைப் பற்றி மரியா விடம் கேட்டால், "அந்த தீர்மானம் உலக நாட்டு அரசுகளுக்கு தான் பொருந்தும்.
என்னைப் போன்ற தனி நபர்களை அந்தத் தீர்மானம் கட்டுப் படுத்தாது' என்கிறார் அவர்.