ரமலான் மாதத்தில் நோன்பு இருக்கும் பகல் வேளையில் சாப்பிட்டதற்காக 2 சிறுவர்களை பொது இடத்தில் வைத்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தூக்கிலிட்டுள்ளனர்.
புனித ரமலான் மாதம் துவங்கியுள்ளதை அடுத்து உலக முஸ்லீம்கள் நோன்பு இருந்து வருகிறார்கள்.
முஸ்லீம்கள் அதிகாலையில் எழுந்து உணவு சாப்பிட்டுவிட்டு பகல் முழுவதும் சாப்பிடாமல், நீர் அருந்தாமல் நோன்பு இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அட்டூழியம் செய்யும் சிரியாவின் டீர் இஸோர் மாகாணத்தில் உள்ள மாயாதீன் கிராமத்தைச் சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட 2 சிறுவர்கள் பகல் வேளையில் உணவு சாப்பிட்டு சிக்கியுள்ளனர்.
இது குறித்து அறிந்த தீவிரவாதிகள் அந்த சிறுவர்களை பிடித்து பொது இடத்தில் தூக்கிலிட்டனர். மதியம் சிறுவர்கள் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
மாலை வரை அவர்களின் உடல்கள் தூக்கில் தொங்கியுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தீவிரவாதிகள் இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றுபவர்கள்.
இஸ்லாமிய சட்டத்தின்படி நடக்கிறேன் என்ற பெயரில் அவர்கள் மக்களின் தலையை வெட்டுவது, கல்லால் அடித்து கொல்வது, சாட்டையால் அடிப்பது உள்ளிட்ட வேலைகளை செய்து வருகிறார்கள்.