சீனாவில் ஹூபெய் மாநிலத்தில் கடந்த 1ஆம் தேதி பயங்கர சூறாவளி வீசியது.
அந்த சூறாவளியில் சிக்கி, ஆசியாவின் மிகப்பெரிய யாங்ட்ஸே ஆற்றில், 456 பேருடன் நான்ஜிங் நகரில் இருந்து சோங்கிங் நகர் நோக்கி சென்ற பயணிகள் கப்பல் கவிழ்ந்தது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சீன பிரதமர் லீ கெகியாங், கடந்த 2ஆம் தேதியன்று சம்பவ இடத்துக்கு விரைந்தார்.
மீட்புப் பணிகளை அவர் நேரில் பார்வையிட்டு, ஆலோசனைகள் வழங்கினார். அதன் பின்னர் 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வந்தது. யாங்ட்ஸே ஆற்றில், 220 கி.மீ. சுற்றளவு பகுதியில் கப்பல் பயணிகளை தேடும் வேட்டை தொடர்ந்து நடந்து வருகிறது.
இதில் 110-க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன. சீன விமானப்படை, 5 ஹெலிகாப்டர்களையும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தியது. இதுவரை குறைந்தது 400 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
எஞ்சியுள்ள 40 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனினும் கப்பல் கடலில் மூழ்கி 7 நாட்கள் ஆகிவிட்டதால் இனிமேல் யாரும் பிழைக்க வாய்ப்பில்லை என்று அஞ்சப்படுகிறது