இஸ்லாமிய பெண் பயணியை பயங்கர வாதியை போல நடத்தி யதற்காக அமெரிக்க விமான நிறுவனமான யுனைட்டட் ஏர்லைன்ஸ் நிறுவனம், அவரிடம் மன்னிப்புக் கோரி யுள்ளது.
அமெரிக் காவைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் தஹேரா, சிகாகோவில் இருந்து வாஷிங்டன் செல்லும் போது விமானத்தில் டின் கோக் கேட்டதற்கு, பணிப்பெண் மறுத் துள்ளார்.
தஹேராவை ஒரு பயங்கர வாதியை நடத்துவது போல நடத்தி, டின் கோக்கைக் கூட நீங்கள் ஆயுதமாகப் பயன் படுத்தக் கூடும் என்று பணிப்பெண் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சமூக தளங்களில் செய்திகள் வெளி யானதை அடுத்து, யுனைட்டட் ஏர்லைன்ஸ் நிறுவ னத்துக்கு கடும் கண்ட னங்கள் எழுந்தன.
இதையடுத்து, தஹேராவிடம் மன்னிப்புக் கோரியுள்ள யுனைட்டட் ஏர்லைன்ஸ் நிறுவனம், இந்த சம்பவத்தில் தொடர்புடைய பணிப்பெண் பணி நீக்கம் செய்யப் பட்டதாகவும் அறிவித் துள்ளது..