நீங்க மாங்கு மாங்கு ன்னு வேலை செஞ்சதும், உடல் சோர்வாகி முதல்ல நீங்க புலம்புவது கால்வலின்னு தான். அந்த கால்கள் வலுவாக இருந்தாலே யானை பலம்.
அதனால் தான் விளையாட்டு வீரர்கள் அவர்களின் கால் மற்றும் கைகளின் தசைகளுக்கு வலுப்பெறும் உடற்பயிற்சிகளை தான் அதிகம் மேற்கொள்வார்கள்.
கால்வலி, பெரும்பாலும் தசை பலவீனத்தினால் வரும். பெண்களுக்கு இந்த மாதிரியான காரணங்களுக்காக கால்வலி வரும்.
அது தவிர்த்து, நரம்பு பலவீனமாக இருந்தால், குறைந்த ரத்த ஓட்டம், ஆர்த்ரைடிஸ், ரத்த சோகை, சர்க்கரை வியாதி, மிக அதிகமாக ஓடியாடி வேலை செய்தால்,
போதிய உடற்ப்யிற்சி இல்லாமை, போன்றவற்றால் வரும். உடலில் நீர்சத்து குறைந்தாலும் வரும். எனவே கால்கள் வலுப்பெற வாட்டாயானாசனம் பயிற்சி அவசியம்
செய்முறை:
1. நெஞ்சுக்கு நேராகக் கைகளைக் குவித்து இடது காலை மடக்கி வலது பக்க தொடையில் வைத்து ஒரே காலில் நிற்கவும்.
2. வலது பக்க முழங்காலை மெதுவாக மடக்கி மடக்கப்பட்டுள்ள இடது பக்க முழங்கால் தரையில் படும்படி நிற்கவும்.
3. இந்த நிலையில் மிகச் சிறிது நேரம் நின்ற பிறகு ஆரம்ப நிலைக்கு வரவும்.
4. ஒரு காலில் நிற்கும் போது மூச்சை இழுக்கவும், உடலை கீழே கொண்டு வரும்போதும் உயர்த்தும் போதும் கும்பகம் செய்யவும்.
5. இறுதி நிலையில் சாதாரண சுவாசம் செய்யவும்.
பலன்கள்:
1. கால் தசைகளும், முழங்காலும் வலுப்பெறுகின்றன.
2. பிரம்மச்சார்யத்தை கடைப்பிடிக்க இந்த ஆசனம் உதவுகிறது.