ஏதேனும் வினாடி வினா நிகழ்ச்சியினை தொலைக் காட்சி நிகழ்ச்சியாய்ப் பார்க்கையில், நாமும் கலந்து கொள்ளலாமே என்ற எண்ணம் தோன்றும்.
இவர்களின் விருப்பத்தினைப் போக்கும் வகையில், இணையத்தில் சில தளங்கள் உள்ளன.
www.triviaplaza.com என்ற முகவரியில் உள்ள தளம் இந்த வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுக் கிடைக்கிறது.
வினாடி வினாவினை ஒரு விளையாட்டு போலத் தருகிறது. Pop Music, Movies, Geography, Science, Computers, Literature, and Classical Music என்ற பிரிவுகளில் வினாடி வினா தொகுப்பினை வழங்குகிறது.
முதலில் நீங்கள் மேற்கொள்ள விரும்பும் பிரிவினைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
பின்னர், அந்த பிரிவில் வினாடி வினா தொடங்கும். சில பிரிவுகளில், தேர்ந்தெடுக்க மேலும் சில பிரிவுகள் கிடைக்கும்.
எடுத்துக்காட்டாக, Geography பிரிவை எடுத்தால், Africa, America, Asia, Europe, General, Oceania, மற்றும் World ஆகிய பிரிவுகள் தரப்படும். இவற்றில் நீங்கள் விரும்பும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கலாம்.
அடுத்து வினாடி வினாவிற்கான இன்டர்பேஸ் காட்டப்படும். இதில் கேள்வியும், நான்கு விடைகளும் தரப்படும்.
நீங்கள் உங்கள் விடையைத் தேர்ந்தெடுத்தவுடன், அது சரியானது தானா என்று காட்டப்படும்.
தவறானது எனில், சரியான விடை எது என்றும் சொல்லப்படும். இந்த குவிஸ் நிகழ்வின் முடிவில், நீங்கள் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் கிரேட் வழங்கப்படும்.
உயர்ந்த கிரேட் A+. குறைந்த கிரேட் F. என்ன குவிஸ் விளையாட தயாரா?
எதற்கும் உங்கள் குழந்தைகள் இல்லாத நேரத்தில் விளையாடுங்கள். மதிப்பெண் குறைந்தால் அவர்கள் கிண்டலுக்கு ஆளாக நேரிடும்.