வாஷிங்டன், ஜூன் 19: அமெரிக்க அதிபர் மாளிகைக்குள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுவரேறிக் குதித்த முன்னாள் ராணுவ வீரருக்கு 17 மாத சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது.
ஈராக் போரில் பங்கேற்ற ஒமர் கான்ஸா லேஸ் (43) என்ற அந்த வீரர், அந்தப் போரால் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக விசாரணை யில் தெரிய வந்தது.
நீதிமன்றத்தில் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்த ஒமர் கான்ஸாலேஸ், தான் யாரையும் தாக்கும் நோக்குடன் வெள்ளை மாளிகைக்குள் ஊடுருவ வில்லை என்று கூறினார்.
அவர் ஏற்கெனவே 9 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்து விட்டதால், இன்னும் 8 மாதங்கள் மட்டும் அவர் சிறையில் இருந்தால் போதும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.