பிரித்தானியாவில் பாய்ந்து வரும் ரயில் முன் சிக்கி தவித்த தோழியை நபர் ஒருவர் தனது உயிரை கொடுத்து காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள Kent நகரில் Ella Akehurst(38) என்ற பெண்மணி வசித்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற நாசா விண்வெளி மைய விஞ்ஞானியான David Ashworth(74) என்பவர் அவரது குடும்பத்திற்கு நெருங்கிய நண்பர் ஆவார்.
இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை Chartham ரயில் நிலையத்தில் உள்ள ரயில் சந்திப்பு பகுதியில் டேவிட் தனது காரை நிறுத்தி விட்டு காருக்குள் அமர்ந்துள்ளார்.
அப்போது, அவரது தோழியான எல்லா ரயில் நடைபாதையிலிருந்து தவறுதலாக தண்டவாளத்தில் விழுந்துள்ளார்.
இதனை தூரத்திலிருந்து கண்டு அதிர்ச்சி அடைந்த டேவிட், காரை விட்டு இறங்கி அவரை காப்பாற்றி ஓடியுள்ளார்.
துரதிஷ்டவசமாக அதே வழிபாதையில் சற்று தொலைவில் ரயில் ஒன்று வேகமாக வந்துக்கொண்டிருந்துள்ளது. எல்லாவின் கையை பிடித்து காப்பாற்ற முயற்சிக்கையில் ரயில் மிக அருகில் வந்துவிடுகிறது.
தண்டவாளத்தில் இருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை பார்த்த ரயில் ஓட்டுனர், ஒலியை எழுப்பு ரயில் பிரேக்குகளை போட்டு ரயிலை நிறுத்த முயற்சிக்கிறார்.
ஆனால், ரயில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத அதே நிலையில், டேவிட் தனது தோழியை ரயில் பாதையிலிருந்து தள்ளி விடும் வேளையில் ரயில் இருவரும் மீதும் மோதியது.
இந்த விபத்தில் டேவிட் சம்பவ இடத்திலேயே பலியானார். எல்லாவிற்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் அவரையும் மருத்துவனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து எல்லாவின் சகோதரரான Luke தனது பேஸ்புக் பக்கத்தில் உருக்கமாக பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், தனது உயிரையும் கொடுத்து தன்னுடைய சகோதரியை டேவிட் காப்பாற்றி உள்ளார்.
இந்த நன்றியையும் உதவியையும் எங்கள் குடும்பம் உயிருடன் உள்ளவரை நாங்கள் மறக்க மாட்டேம். டேவிட் மட்டும் உதவா விட்டால் இன்று எனது சகோதரி உயிருடன் இருக்க மாட்டார்.
அவருக்கு எனது குடும்பத்தின் சார்பாக கண்ணீருடன் அஞ்சலி செலுத்துகிறோன் என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய பொலிசார், இந்த விபத்து தொடர்பாக தங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும்,
இந்த விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் எல்லாவின் உடல் நிலை தற்போது முன்னேற்றம் அடைந்து வருவதாக கூறினார்.
தோழியை காப்பாற்றுவதற்காக தன்னுடைய உயிரையே தியாகம் செய்த டேவிட் அந்நகர மக்களிடையே வியப்பையை நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Tags: