உண்ணாவிரதம்... பாஸ்ட்டிங் எனப்படுவது ஏன்?

பாஸ்ட் (Fast) என்பதற்கு உறுதியாகப் பிடித்துக் கொள்வது என்று பொருள். சாப்பிடாமல் இருக்கும் பழக்கத்தைக் குறிக்கும் Fasting என்பதற்கு உறுதியான தன்னடக்கம் என்பது விளக்கம்.
உண்ணாவிரதம்... பாஸ்ட்டிங் எனப்படுவது ஏன்?
இக்காலத்தில் உண்ணாவிரதம் இருப்பது பல வழிகளில் மேற்கொள்ளப் படுகிறது. மத உணர்வு உள்ளவர்களாலும், இல்லாத வர்களாலும் பின்பற்றப் படுகிறது.

தங்களைப் பிடித்துச் சிறையில் அடைத்தவர்களுக்கு தங்கள் மனம் அல்லது உடல் மீது கட்டுப்பாடு கிடையாது என்பதை வெளிப்படுத்த கைதிகள் உண்ணா விரதம் இருப்பார்கள். 

கடவுளின் மீதுள்ள தீவிர நம்பிக்கையை வெளிப்படுத்த சமயப் பயிற்சியாகவும் உண்ணாநோன்பு பக்தர்களால் மேற்கொள்ளப் படுகிறது. 

உடலில் இருந்து விஷத் தன்மையை வெளியேற்ற சிலர் உண்ணாவிரதம் இருப்பதும் உண்டு. 

அடிப்படையில், உறுதியான கட்டுப்பாட்டோடு இருப்பது என்ற பொருளில் தான் பழங்காலத்தில் இருந்து இன்று வரை இச்சொல் வழக்கத்தில் உள்ளது.
Tags:
Privacy and cookie settings