கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் சாமளாபுரா கிராமத்தை சேர்ந்த லதா (25) என்பவருக்கு, கொப்பல் அருகே ஹீரேபொம்மநாளா கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்த 3–வது நாளில் லதா, தனது கணவருடன், குலதெய்வமான ராவணகி கரிபசப்பா கோவிலுக்கு சென்றுள்ளார்.
அங்கு சாமி கும்பிட்டு விட்டு, அருகில் இருந்த மடாதிபதி ஹனுமந்தப்பா பாகலியிடம் ஆசிர்வாதம் வாங்கியுள்ளனர்.
அப்போது, லதாவின் அழகில் மயங்கிய மடாதிபதி, அவரை எப்படியாவது அனுபவித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில், லதாவின் கணவரை, கடைக்கு சென்று பூஜைப் பொருட்களை வாங்கி வருமாறு கூறியுள்ளார்.
அதன் பின்னர், லாதாவிடம் நான் சொல்வதை நீ கேட்டால் உனக்கு தெய்வீக சக்தி கிடைக்கும் என்று கூறி அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளார்.
கடைக்கு சென்றுவிட்டு திரும்பிய கணவர், தனது மனைவியை மடத்தில் தேடியுள்ளார், அங்கு அவர் இல்லாத காரணத்தால், வீட்டிற்கு சென்றிருப்பார் என நினைத்து அவரும் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
ஆனால், வீட்டில் லாதா இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், மீண்டும், ஹனுமந்தப்பா பாகலியிடம் சென்று தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு கேட்டுள்ளார்.
உடனே,மடாதிபதியும் பல பூஜைகளை நடத்தி, உனது மனைவி கொப்பல் அருகே உள்ள மாளேமல்லேஸ்வரா கோவிலில் இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து லதாவின் கணவர் அந்த கோவிலுக்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது அங்கு லதா தனியாக இருந்துள்ளார். திருமணம் ஆன 3–வது நாளிலே மாயமானதால் ஆத்திரமடைந்த கணவர், லதாவை அடித்து உதைத்து 4 நாட்களாக எங்கே சென்றாய்? என்று கேட்டு விசாரித்துள்ளார்.
தன்னை மடாதிபதி ஹனுமந்தப்பா பாகலி வசியம் செய்து கடத்திச் சென்று ஒரு தங்கும் விடுதியில் சிறை வைத்து 4 நாட்களாக கற்பழித்து விட்டார் என்று கூறி லதா கதறி அழுதுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த கணவர் இனிமேல் நான் உன்னுடன் வாழமாட்டேன் என்று அந்த இடத்திலேயே அவரை விட்டு சென்று விட்டார்.
இதனைத் தொடர்ந்து, கொப்பல் மாவட்ட பொலிஸ் நிலையத்தில் இந்த சம்பவம் தொடர்பாக லதா புகார் அளித்துள்ளார். தற்போது தலைமறைவான மடாதிபதியை பொலிசார் தேடி வருகின்றனர்.