கால்பந்து வீரர்களின் தொடையை உற்று நோக்கவே பெண்கள் போட்டியைப் பார்க்க மைதானங்களுக்கு செல்கின்றனர் என்று சவுதி மதகுரு ஒருவர் கூறியுள்ளார்.
இவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத் தியுள்ளது. சமூக வலைத் தளமான டுவிட்ட ரிலும் கடும் விமர் சனத்திற்கு உள்ளானது.
இந்தியாவின் உண்மையான வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் இந்தியாவின் உண்மையான வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் தான் என்று மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆன்டி ராபர்ட்ஸ் கருத்து தெரிவித் துள்ளார்.
மேலும், உமேஷ் யாதவுக்கு முன்பாக இந்தியாவில் உண்மை யான வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்ததாக நான் கருத வில்லை என்றும்,
தற்போது இருப்பதை விட உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆக்ரோஷம் காட்ட வேண்டும் எனவும் அவர் தெரிவித் துள்ளார்.
இங்கிலாந்து விக்கெட் கீப்பர் கிரேக் கீஸ்வெட்டர் ஓய்வு கண்ணில் ஏற்பட்ட காயம் காரணமாக சர்வதேச போட்டிகளில் இருந்து இங்கிலாந்து விக்கெட் கீப்பர் கிரேக் கீஸ்வெட்டர் (27) ஓய்வு பெறுவதாக அறிவித் துள்ளார்.
கடந்து ஆண்டு நார்த் ஆம்ப்டன் ஷைர் அணிக்கு எதிராக விளையாடும் போது அவரது கண்ணில் காயம் ஏற்பட்டது.
அத்துடன் கன்னத்தில் உள்ள தாடை எழும்பிலும் முறிவு ஏற்பட்டது. இதில் இருந்து குணம் அடைந்து மீண்டும் விளையாட வாய்ப் பிள்ளாத தால் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா வின் சிறந்த வீரர் டிவில்லியர்ஸ் தென் ஆப்பிரிக்கா வின் சிறந்த வீரருக்கான விருதை டிவில்லி யர்ஸ் 2வது முறையாக வென் றுள்ளார்.
இத்துடன், சிறந்த ஒரு நாள் போட்டி வீரர், தென் ஆப்பிரிக்க ரசிகர்களின் மனம் கவர்ந்தவர், மிகவும் சிறந்த வீரர் என, கூடுதலாக 3 விருதுகள் டிவில்லி யர்ஸ் பெற்றார்.
அதாவது, மொத்தம் 9 பிரிவுகளில் தரப்பட்ட விருதுகளில், டிவில்லி யர்ஸ் மட்டும் நான்கு விருதினை தட்டிச் சென்றார்.
உயிர் தப்பிய வங்கதேச ஒருநாள் அணியின் தலைவர் மொர்டசா மிர்பூரில் ஏற்பட்ட விபத்தில் வங்கதேச ஒருநாள் அணியின் தலைவர் மொர்டசா அதிர்ஷ்ட வசமாக லேசான காயங் களுடன் உயிர் தப்பினார்.
இவர் பயிற்சி க்காக சைக்கிள் ரிக் ஷாவில், மிர்பூர் மைதா னத்திற்கு செல்லும் போது, எதிரே வந்த பஸ்சின் டயர் வெடித்து அந்த பஸ் ரிக்ஷா வின் மீது மோதியது.
உடனே சுதாரித்துக் கீழே குதித்த மொர்டசா, லேசான காயங் களுடன் உயிர் தப்பினார். ரிக் ஷா தொழிலாளி காயமின்றி தப்பினார்.