பாகிஸ்தானில் மத குருவுக்கு 10 ஆண்டு சிறை !

பாகிஸ்தானில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய மத குருவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
பாகிஸ்தானில் மத குருவுக்கு 10 ஆண்டு சிறை !
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம், காயிம்பூரில் உள்ள மசூதியில் மத குருவாக இருந்தவர் மவுலானா அப்துல் கனி. 

இவர் 2 மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் மசூதியில் பேசிய போது ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மீது வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது வெறுப்புணர்வை தூண்டியதாக தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. 

விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப் பட்டுள்ளதாக கருதிய நீதிபதி காலித் அர்ஷத், 

அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும். ரூ.7 லட்சம் அபராதம் விதித்தும் நேற்று தீர்ப்பு கூறினார்.
இதேபோன்று அங்கு வெறுப்புணர்வை விதைக்கும் இலக்கியங்களை வினியோகம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் 4 பேருக்கு பல்வேறு கால அளவிலான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
Tags:
Privacy and cookie settings