ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் பாயும் அணு ஆயுத வாகனம் !

ஒலியைவிட 10 மடங்கு வேகத்தில் சீறிப் பாயும் ‘ஹைபர்சானிக் கிளைட்’ வாகனத்தை சீனா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. 


இந்த வாகனம் அணுஆயுதங் களைச் சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டதாகும்.

தென்சீனக் கடலில் சீன ராணுவம் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தி வருகிறது.

அந்தப் பகுதியில் ஜப்பான், வியட்நாம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்குச் சொந்தமான தீவுகளையும் கடல் பரப்பையும் ஆக்கிரமிக்க சீனா முயற்சி செய்கிறது. 

இந்த விவகாரத்தில் ஜப்பான், பிலிப்பைன்ஸு க்கு ஆதரவாக அமெரிக்கா களத்தில் குதித்துள்ளது.

சீனாவுக்கு எதிராக ஆசிய-பசிபிக் பிராந்திய நாடுகளின் ஆதரவை அமெரிக்கா திரட்டி வருகிறது. 

அண்மையில் தென்சீனக் கடலில் அமெரிக்க உளவு விமானம் வட்ட மடித்தது. இதற்கு சீன தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் கடந்த வாரம்

அதி நவீன ‘ஹைபர்சானிக் கிளைட்’ வாகனத்தை சீனா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. 

தரைத்தளம், போர்க்கப்பல் அல்லது போர் விமானத்தில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணை மூலம்

இந்த ‘ஹைபர்சானிக் கிளைட்’ வாகனம் விண்வெளி யில் செலுத்தப் படுகிறது.

அங்கு ஏவுகணையில் இருந்து பிரியும் அந்த வாகனம் ஒலியைவிட 10 மடங்கு வேகத்தில் சீறிப் பாய்ந்து இலக்கை தாக்கி அழிக்கிறது.


அதாவது மணிக்கு 7600 கி.மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. அதன்மூலம் அணு குண்டுகளையும் வீச முடியும். 

தற்போது சீனாவிடம் உள்ள அதிநவீன ஏவுகணைகளை அமெரிக்க ராணுவத்தால் எளிதாக இடை மறித்து அழிக்க முடியும்.

ஆனால் ‘ஹைபர்சானிக் கிளைட்’ வாகனத்தை ரேடாரில் கண்டறிய முடியாது.

இதனால் அமெரிக்க ராணுவத்தால் தடுக்கவோ, அழிக்கவோ முடியாது என்று பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தெரிவித் துள்ளனர். 

கடந்த 2014 ஜனவரி 9-ல் ஹைபர்சானிக் கிளைட் வாகனத்தை சீனா முதல் முறையாக சோதனை செய்தது.

அதே ஆண்டில் ஆகஸ்ட் 7-ல் நடத்தப்பட்ட சோதனை தோல்வியில் முடிந்தது.

மீண்டும் கடந்த டிசம்பர் 2-ல் மூன்றாவது முறையாக சோதனை நடத்தப் பட்டது.


இந்த சோதனை வெற்றி பெற்றது. 18 மாதங்களு க்குள் நான்காவது முறையாக சில நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தப் பட்டுள்ளது. 

இன்னும் ஓராண்டு க்குள் அந்த வாகனம் சீன ராணுவத்தில் சேர்க்கப்பட்டு விடும் என்று பெய்ஜிங் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவை அடுத்து சீனாவிடம் மட்டுமே ‘ஹைபர்சானிக் கிளைட்’ வாகனம் உள்ளது.
Tags:
Privacy and cookie settings