விக்டோரியா ராணியின் உள்ளாடை 11 லட்சத்திற்கு ஏலம் !

மறைந்த இங்கிலாந்து ராணி விக்டோரியா ரெஜினாவின் 125 ஆண்டுகள் பழமையான உள்ளாடை 11 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. இங்கிலாந்து மற்றும் ஐயர்லாந்தின் ராணியாக இருந்தவர் விக்டோரியா ரெஜினா. 
விக்டோரியா ராணியின் உள்ளாடை 11 லட்சத்திற்கு ஏலம் !
அப்போது அவர் பயன்படுத்திய உள்ளாடைகள் ஏலத்தில் விடப்படுவதாக இங்கிலாந்தின் பிரபல ஏல நிறுவனமான தி சிப்பன்ஹெம் அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து ராணி பயண்படுத்திய உள்ளாடைகளை வாங்க ஏல நிறுவனத்தில் கூட்டம் அலைமோதியது.

இறுதியாக 125 ஆண்டுகள் பழமையான இரண்டு ஜோடி உள்ளாடைகள் 12 ஆயிரம் பிரிட்டன் பவுன்டுக்கு ஏலம் போனது. 

இது குறுத்து ஏல நிறுவன அதிகாரி ரிச்சர்டு எட்மன்ட்ஸ் கூறுகையில், ராணியின் உள்ளாடை 12 ஆயிரம் பவுன்டுக்கு விலை போனது புதிய சாதனை.

125 ஆண்டுகள் பழமையான இந்த உள்ளாடை ஏல நிறுவனத்திற்கு கிடைத்த பிறகு குளிரூட்டப்பட்ட அறையில் பாதுகாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  
Tags:
Privacy and cookie settings