இந்தோனேஷிய ராணுவ விமான விபத்தில் அதில் பயணம் செய்தவர்கள் உட்பட 116 பேர் பலியாகிவிட்டதாக ராணுவ அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கை யின்படி, 12 விமான குழுவினர் மற்றும் 101 பயணிகளுடன் ஹெர்குலஸ் சி-130 என்ற ராணுவ விமானம் இன்று புறப்பட்டுள்ளது.
சுமார் 5 கி.மீ தொலைவு பறந்ததும் அந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, புறப்பட்ட இடத்திற்கே விமானம் திரும்பியுள்ளது.
ஆனால், எதிர்பாராத விதமாக விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் சுமத்திரா நகருக்கு அருகில் உள்ள ஒரு ஹோட்டல் மீது பலமாக மோதி வெடித்துச் சிதறியுள்ளது.
இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும், மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில், அந்த விமானத்தில் பயணம் செய்த அத்தனை பேரும் (113 பேர்) பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
மேலும், விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் பொதுமக்களில் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால், இந்த விமான விபத்தில் மொத்தம் 116 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.
இந்த விமான விபத்தில் பலியானவர்களுக்கு, அந்நாட்டின் அதிபர் ஜோக்கோ விடோடோ இரங்கல் தெரிவித்துள்ளார்.