அமெரிக்காவில் 14 வயது சிறுமியை சர்ச்சுக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த காம கொடூரனை காவல்துறையினர் கைது செய்தனர்.
அமெரிக்காவில், வெஸ்ட்மோர் லேண்ட் கவுன்ட்டி அருகில் உள்ள வேன்டர்கிப்ட் பகுதியைச் சேர்ந்தவன் ஜோனத்தன் ரியான் டேவிஸ் (21). இளம் வயது முதலே காம இச்சையில் அதிக ஈடுபாடு கொண்டவன்.
இதனால், இவனது கண்ணில் தென்படும் சிறுமிகளையும், பெண்களையும் பாலியல் பலத்காரம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளான்.
இந்நிலையில், சமீபத்தில் 14 வயது சிறுமி உள்பட 3 இளம்பெண்களை பூங்கா ஒன்றில் சந்தித்த இவன், அவர்களை ஆசை வார்த்தை கூறி, அருகில் உள்ள ஒரு சர்ச்சுக்கு அழைத்துச் சென்றுள்ளான்.
அங்கு வைத்து, முதலில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பின்பு, இரு பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இதனையடுத்து, தனது கை மணிகட்டை கத்தியால் அறுத்து, அதிலிருந்து வெளியே வந்த ரத்தத்தை அந்த சிறுமியையும், பெண்களையும் குடிக்க வைத்துள்ளான்.
பிறகு, அந்த பெண்களின் கை மணிகட்டுகளை அறுத்து, அதில் இருந்து வெளியே வந்த ரத்தத்தை நால்வரும் மாறிமாறி குடித்துள்ளனர்.
இந்நிலையில், அந்த காம மிருகத்திடம் இருந்து தப்பி வந்த பெண் ஒருவர், நடந்த சம்பவம் குறித்து அமெரிக்க காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், ஜோனத்தன் ரியாஸ் டேவிஸை கைது செய்தனர். பின்பு, நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
ஆனால், ஜோனத்தன் ரியாஸ் டேவிஸை நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது. இந்த வழக்கின் மறு விசாரணை ஜூலை 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.