பொது மக்கள் முன்னிலையில் 1400 பேருக்கு மரண தண்டனை !

வட கொரியா பொது மக்கள் முன்னி லையில் கடந்த 13 ஆண்டுகளில் சுமார் 1400 நபர்களுக்கு அந்நாட்டு அரசு மரண தண்டனை நிறைவேற்றி உள்ளதாக மனித உரிமைகள் அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட் டுள்ளது.
பொது மக்கள் முன்னிலையில் 1400 பேருக்கு மரண தண்டனை !
தென் கொரியா அரசாங்கத் தின் நிதி உதவியுடன் செயல்பட்டு வரும் Korean Institute for National Unification என்ற அமைப்பு 

வட கொரியாவில் நிகழ்ந்த மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்தி வெள்ளை அறிக்கை ஒன்றை அண்மையில் வெளியிட்டது.

இந்த ஆய்வில் வெளியா கியுள்ள புள்ளி விபரங் களானது, வட கொரியா விலிருந்து தப்பித்து அந்நாட்டை விட்டு வெளியேறிய வரிடமிருந்தும், 

பொது இடங்களில் மரண தண்டனை நிறை வேற்றும் போது அதனை நேரில் பார்த்தவர் களிடமிருந்து சேகரிக்கப் பட்டுள்ளது.

அதாவது, கடந்த 2000ம் ஆண்டி லிருந்து 2013ம் ஆண்டு வரை சுமார் 1382 நபர்களுக்கு பொது மக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறை வேற்றப் பட்டுள்ளது. 

இந்த புள்ளி விபரங்கள் இதை விட கூடுதலாக கூட இருக்கலாம் என தெரிகிறது. 

மரண தண்டனை விதிக்கப்பட்ட வர்களை பொது மக்கள் முன்னிலையில் நிறை வேற்றினால் தான், மக்களை தங்களது கட்டுப் பாட்டிற்குள் வைத்திருக்க முடியும் என்பதால் இந்த வழக்கம் கடைப்பிடிக்கப் படுகிறது.
வட கொரியா அரசு செய்தி நிறுவனம் வெளியிட் டுள்ள தகவலில், 2014ம் ஆண்டு 2 மரண தண்டனை மட்டுமே நிறை வேற்றப் பட்டதாகவும், 

2009ம் ஆண்டு ஒரு மரண தண்டனையை கூட நிறைவேற்ற வில்லை என கூறியுள்ளது.

ஆனால், மனித உரிமைகள் நடத்திய ஆய்வில், 2009ம் ஆண்டில் மட்டும் 160 நபர்களுக்கு மரண தண்டனை நிறை வேற்றப்பட்டுள் ளதாக தெரிய வந்துள்ளது.

சர்வதேச மன்னிப்பு சபையான அம்னிஸ்ட்டியும், வட கொரியாவில் மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதற்கு கண்டனம் தெரிவித்து வருகிறது.
தற்போது அம்னிஸ்ட்டி வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில், மரண தண்டனை யிலிருந்து தப்பித்துள்ள சுமார் 2 லட்சம் பேர் அந்நாட்டில் சிறை கைதிகளாக உள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட் டுள்ளது.
Tags:
Privacy and cookie settings