ஜூலை 19-ந்தேதி ஐ.பி.எல். நிர்வாகக்குழு கூட்டம்

0 minute read
ஐ.பி.எல். மேட்ச் பிக்சிங் வழக்கில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி லோதா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட குழு இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.


இதில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் இரண்டு ஆண்டு காலம் ஐ.பி.எல். தொடர்பான விவகாரத்தில் ஈடுபடக்கூடாது என்று கூறியிருந்தது.

இதனால் இந்த அணி வீரர்கள் நிலை என்ன? அடுத்த போட்டியை பி.சி.சி.ஐ. எப்படி நடத்தப் போகிறது? என்று ஏராளமான கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் வரும் 19-ந்தேதி ஐ.பி.எல். நிர்வாகக்ழு கூட்டம் மும்பையில் கூடுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் இரு அணிகள் நீக்கப்பட்டது குறித்தும், இதற்கு மாற்றாக இரண்டு அணிகளை தேர்வு செய்ய ஏலம் விடுவது தொடர்பாக விவாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:
Privacy and cookie settings