கோஷ்டி மோதலில் 2 பேர் படுகாயம் 4 பேர் கைது !

வலங்கைமான் அருகே நடந்த கோஷ்டி மோத லில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பக 4 பேரை போலீசார் கைது செய் தனர்.


கோஷ்டி மோதல்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த ஆண்டாங்கோவில் மாஞ்சேரி கீழத்தெருவை சேர்ந்தவர் தமிழழகன் (வயது24). இவ ருக்கும் அதே பகுதியை சேர்ந்த சாமிநாதன் மகன் நீலமேகம் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று தமிழழகன் தனது வீட்டு வாசலில் நின்றபடி உறவினர் களான அதே பகுதியை சேர்ந்த பிரபு (32), அவருடைய மனைவி சுசிலா ஆகியோரிடம் பேசி கொண்டிருந்தார்.

அப் போது அங்கு வந்த நீலமேகம், அவருடைய உறவினர் கும்பகோணம் ஆதனூர் பகுதியை சேர்ந்த கோபால் மகன் சவுந்தரராஜன், மருதாநல்லூர் மேலதெருவை சேர்ந்த சந்தி ரன் மகன் மதியழகன் ஆகிய 3 பேரை கொண்ட கோஷ்டிக் கும், தமிழழகன் கோஷ்டிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து நடந்த மோத லில் 2 கோஷ்டியினரும் ஒரு வரை ஒருவர் தாக்கி கொண்ட னர். இதில் படுகாயம் அடைந்த தமிழழகன், சுசிலா ஆகிய 2 பேரும் வலங்கைமான் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

4 பேர் கைது

இதுகுறித்து தமிழழகன் வலங்கைமான் போலீசில் புகார் கொடுத்தார். இதே போல் நீலமேகத்தின் தாயார் நீலாவதி வலங்கைமான் போலீசில் புகார் அளித்தார்.

2 தரப்பும் அளித்த புகா ரின்பேரில் வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து நீலமேகம், சவுந்தர ராஜன், மதியழகன், பிரபு ஆகிய 4 பேரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
Tags:
Privacy and cookie settings