நடுவானில் மோதி சிதறிய விமானங்கள்.. 2 பேர் பலி !

அமெரிக்காவின் எப்-16 ரக போர் விமானமும், செஸ்னா விமானமும் வானில் பறக்கையில் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகினர்.
நடுவானில் மோதி சிதறிய விமானங்கள்.. 2 பேர் பலி !
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தின் சும்தர் நகரில் உள்ள ஷா விமானப் படை தளத்தில் இருந்து எப்-16 ரக போர் விமானம் நேற்று பயிற்சியில் ஈடுபட்டது.

அப்போது அந்த விமானமும் 2 இருக்கைகள் கொண்ட செஸ்னா விமானமும் சார்ல்ஸ்டன் நகரில் நடுவானில் மோதி வெடித்துச் சிதறின. 

இந்த விபத்தில் செஸ்னா விமானத்தில் இருந்த 2 பேர் பலியாகினர். எப்-16 விமானி பாராசூட் மூலம் பத்திரமாக தரையிறங்கினார்.

விமானங்களின் பாகங்கள் அந்த பகுதி முழுவதும் சிதறிக் கிடந்தது. பாகங்கள் விழுந்து சார்ல்ஸ்டன் பகுதியில் எந்த வீடுகளும் சேதம் அடைந்ததாக தகவல் இல்லை.
விமானங்கள் எப்படி விபத்துக்குள்ளாகின என்ற விபரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஷா விமானப் படை தளத்தில் எப்-16 விமானங்கள் தினமும் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.

இரண்டு இருக்கைகள் கொண்ட இந்த ரக விமானங்கள் 1959ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings