அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். சர்வதேச விண்வெளி ஆய்வக கட்டுமான பணிக்கு அடிக்கடி விண்வெளிக்கு சென்று வருகிறார்.
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழும் சாத்தியங்கள் குறித்து அமெரிக்காவின் ‘நாசா’ மையம் ஆய்வு நடத்தி வருகிறது.
வருகிற 2030ம் ஆண்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப தனியார் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
போயிஸ் கம்பெனி மற்றும் ‘ஸ்பேஸ்–எக்ஸ்’ என்ற அந்த நிறுவனம் அதற்கான விண்கலத்தை தயாரித்து வருகிறது.
இந்த நிலையில் செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் 4 விண்வெளி வீரர்களை ‘நாசா’ நிறுவனம் தேர்வு செய்துள்ளது. அவர்களில் 49 வயது சுனிதா வில்லியம்சும் உள்ளார்.
இவர் தவிர ராபர்ட் பெங்கன், எரிக் போயே, டக்லிஸ் ஹர்லி ஆகியோரும் அடங்குவர்.
இவர்கள் அனைவரும் தனியார் நிறுவன விண்கலத்தில் செவ்வாய் கிரகத்துக்கு பயணம் செய்ய தீவிர பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.