வலங்கைமானில் 23 மீட்டர் அகலத்தில் புற வழிச்சாலை அமைக் கப்பட உள்ளதாக நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் மீனாட்சி கூறினார்.
கருத்து கேட்பு கூட்டம்
கும்பகோணத்தில் இருந்து அதிராம்பட்டினம் வரை உள்ள மாநில நெடுஞ்சாலையை (எஸ்.எச்.66) விரிவு படுத்தும் பணிகள் தொடங்க உள்ளது. இதேபோல வலங்கை மானை சுற்றி புறவழிச் சாலையும் அமைய உள்ளது.
இதற்கான நிலம் கையகப் படுத்துதல், திட்ட வரைவு தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் தொடர்பான பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டம் வலங்கைமான் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறி யாளர் மீனாட்சி தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
புறவழிச்சாலை
கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் வழியாக அதி ராம்பட்டினம் வரை மாநில நெடுஞ்சாலையை விரி வாக்கம் செய்வதற்கும், வலங்கைமானில் புறவழிச் சாலை அமைப்பதற்கும் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு அதன் அடிப் படையில் திட்ட வரைவு தயாரிக்கப்பட உளளது.
புறவழிச்சாலை வலங்கைமான் அருகே கும்பகோணம் சாலை யில் உள்ள மாடாகுடி, செம் மங்குடி வழியாக அமைக்கப் படும். 23 மீட்டர் அகலத்தில் புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.
இதற்காக கையகப் படுத்தப்படும் நிலத்துக்கு பதிலாக மாற்று நிலம் வழங்கு வதற்கு ஆலோசனை செய்யப் பட்டு வருகிறது. பணிகள் தொடர்பான வரைவு அறிக்கை மற்றும் ஆய்வு அறிக்கை அரசின் கவனத்துக்கு விரைவில் அனுப்பப்பட உள்ளது. பின்னர் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு பணிகள் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் திருவாரூர் உதவி கோட்ட பொறியாளர் சீனிவாசன், இளநிலை பொறி யாளர் கனகசுந்தரம், இளநிலை திட்ட பொறியாளர் கலிய பெருமாள், திட்ட தயாரிப் பாளர் இளங்கோவன், வலங்கைமான் பேரூராட்சி தலைவர் ஜெயபால், வர்த்தகர் சங்க தலைவர் பரதாழ்வார், செயலாளர் மூர்த்தி மற்றும் திப்பிராஜபுரம், மாடாகுடி, வலங்கைமான், செம்மங்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண் டனர்.